என் மலர்tooltip icon
    < Back
    Ghilli
    Ghilli

    கில்லி

    இயக்குனர்: தரணி
    இசை:வித்யாசாகர்
    வெளியீட்டு தேதி:17 April 2004
    Points:11268

    ட்ரெண்ட்

    வாரம்1234567
    தரவரிசை66332927424229
    Point18625301274810811895334
    கரு

    கில்லி திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

    விமர்சனம்

    தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ந் தேதி திரைக்கு வந்த படம் கில்லி. படத்தில் வேலு கதாபாத்திரத்தில் விஜய்யும் தனலட்சுமி கதாபாத்திரத்தில் திரிஷாவும் முத்துப்பாண்டியாக பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர்.

    கில்லி படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் 50 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றது.

    இந்நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லி படம் மீண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது. படம் வெளியாகி உள்ள திரையரங்குகள் அனைத்திலும் சில தினங்களுக்கு டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டது.

    கில்லி படம் மறு வெளியீடு பற்றி நடிகை திரிஷா அவரது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்தார். படத்தின் இயக்குனர் தரணி மற்றும் வித்யாசாகர் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்து மகிழ்ந்தனர். பிரகாஷ் ராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் அவரது மகிழ்ச்சியை பகிர்ந்தார். படத்தின் தயாரிப்பாளரான ரத்னம் மற்றும் படம் விநியோகிஸ்தர் என அனைவரும் மிகவும் கொண்டாடத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கின்றனர். 

     படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களின் அனுபவத்தையும் , ஆடிய ஆட்டத்தையும் , விஜயின் ரசிகர்கள் பல, கில்லி படத்தை இப்பொழுது தான் முதன்முறையாக தியேட்டரில் பார்க்கிறார்கள். 2004 ஆம் ஆண்டு வெளியான போது படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைத்ததோ அதே அளவு 20 ஆண்டுகளுக்கு பிறகும் வரவேற்பை பெற்றுள்ளது..

    கடந்த சில மாதங்களாகவே பல படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் எந்த படத்திற்கும் கில்லி படத்தின் அளவிற்கு வரவேற்பு இல்லை. படம் ரீரிலீஸ் செய்த இரண்டு நாட்களிலே  வசூல் 10 கோடியை தாண்டியுள்ளது. படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு 2 வாரங்கள் ஆகிய நிலையிலும் படம் திரையரங்களில்  வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    தற்பொழுது தமிழகம் முழுவதும் 21 கோடியை வசூலில் கடந்துள்ளது.  தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளம், சிங்கபூர், ஃப்ரான்ஸ் மற்றும் பல நாடுகளில் படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  அங்கு உள்ள ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். 

     

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    28 July 2024
    KALI RAJ

    27 April 2024
    vigneshwari kumar

    Super

    ×