என் மலர்tooltip icon
    < Back
    Guardian
    Guardian

    கார்டியன்

    இயக்குனர்: குரு சரவணன்
    எடிட்டர்:தியாகராஜன் எம்
    ஒளிப்பதிவாளர்:கே.ஏ. சக்திவேல்
    இசை:சாம் சி.எஸ்
    வெளியீட்டு தேதி:8 March 2024
    Points:2152

    ட்ரெண்ட்

    வாரம்1234
    தரவரிசை95126142124
    Point10959617719
    கரு

    தன்னை கொன்றவர்களை ஆவியாக வந்து பழிவாங்கும் கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    இன்டீரியர் டிசைனிங் வேலை செய்யும் நாயகி ஹன்சிகாவை, சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று அனைவரும் அழைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஹன்சிகா மனதில் நினைப்பது அப்படியே நடக்கிறது. இது எப்படி நடக்கிறது என்பது அவருக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

    இதை தெரிந்துக் கொண்ட ஹன்சிகா, நிறைய நல்ல விஷயங்களை நினைக்கிறார். அது அப்படியே நடக்க மறுபுறம் கெட்ட விஷயங்களும் நடக்கிறது. இதனால் வருத்தப்படும் ஹன்சிகா இதில் இருந்து எப்படி வெளியே வருவது என்று நினைக்கும் நேரத்தில் ஒரு ஆவி ஒன்று ஹன்சிகாவை பயமுறுத்துகிறது.

    இறுதியில் அந்த ஆவி யார்? எதற்காக ஹன்சிகாவை பயமுறுத்துகிறது? ஹன்சிகா மனதில் நினைப்பது நடக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகியாக நடித்து இருக்கும் ஹன்சிகா, அழகால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். ஆனால், நடிப்பால் கவர தவறிவிட்டார். படம் முழுக்க அடிக்கடி முறைத்துக் கொண்டு ஒரே ரியாக்ஷன் கொடுத்து இருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடித்து இருக்கும், பிரதீப் ராயனுக்கு அதிகம் வேலை இல்லை.

    சுரேஷ் மேனன், ஸ்ரீமன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, அபிஷேக் வினோத் ஆகியோர் வில்லன்களாக  நடித்திருக்கிறார்கள். இவர்களின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை. மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை நகைச்சுவை என்ற பெயரில் என்னமோ செய்கிறார்கள், ஆனால், சிரிப்புதான் வரவில்லை. பிளாஷ்பேக்கில் வரும் நடிகை தியா கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.

    இயக்கம்

    பேய் படங்களுக்கு உண்டான பழைய பாணியை பின்பற்றி இயக்கி இருக்கிறார் இயக்குனர் குரு சரவணன், சபரி. பழிவாங்கல் கதையை சுவாரஸ்யம் இல்லாமல் சொல்லி இருக்கிறார்கள். பிளாஷ்பேக் காட்சி அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. கதாபாத்திரங்களிடையே வேலை வாங்க தவறி இருக்கிறார்கள். அடுத்தடுத்து யூகிக்க முடியும் அளவிற்கு காட்சிகள் அமைந்து இருப்பது பலவீனம். 

    இசை

    படத்திற்கு பெரிய பலம் சாம் சிஎஸ் இசை. பின்னணி இசை ஒரு சில இடங்களில் சத்தமாக உள்ளது.

    ஒளிப்பதிவு

    சக்திவேலின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    13 March 2024
    Malar

    Nice

    ×