என் மலர்


ஐடென்டிட்டி
மர்ம நபரை தேடி செல்லும் காவல் அதிகாரியின் கதை
கதைக்களம்
ஒரு இளம் பெண் ஆடை மாற்றுவதை ட்ரையல் ரூமில் வீடியோவாக எடுத்து அந்த பெண்ணிடம் ஒருத்தன் மிரட்டி பணம் கேட்கிறான். இப்படி வழக்கமா செய்து வரும் இவரை மர்ம நபர் ஒருவர் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் இடத்தில் வைத்து உயிரோடு எரித்து விடுகிறார். இச்சம்பவத்தை நேரில் பார்த்து விடுகிறார் நாயகி திரிஷா. இதனை காவல் நிலையத்தில் கூற செல்லலாம் என போகும் போது ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார். இதில் அவருக்கு பல நினைவுகள் அழிந்துப் போகிறது. இந்த வழக்கை காவல் அதிகாரியான வினய் ராய் கையில் எடுக்கிறார். குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க ஸ்கெட்ச் ஆர்டிஸ்டாக வருகிறார் கதாநாயகனான டொவினோ தாமஸ். திரிஷாவிடம் இருக்கும் ஒரு சில நினைவுகளை வைத்து குற்றவாளியின் உருவத்தை வரைய முயற்சி செய்கிறார். இறுதியில் குற்றவாளியை கண்டுப்பிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
இயக்கம்
ஒரு கிரைம் திரில்லர் கதையை இயக்கியுள்ளனர் இயக்குனர் அகில் பால் மற்றும் அனாஸ் கான். முதல் பாதி திரைக்கதை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. அடுத்து என்ன, அடுத்து என்ன என சுவாரசியமாக திரைக்கதையை கொண்டு சென்றுள்ளனர். ஆனால் படத்தின் இரண்டாம் பாதியில் இந்த சுவாரசியம் குறைந்து படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.
நடிகர்கள்
டொவினோ தாமஸ் நடிப்பில் அசத்தியுள்ளார். திரிஷா, கொடுத்த கதாப்பாத்திரத்திற்கு நேர்மையாக நடித்துள்ளார். வினய் ராய், அஜு வர்கீஸ், ஷம்மி திலகன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இசை
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ் படத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். திரைக்கதை ஓட்டத்திற்கு இவரின் ஒளிப்பதிவு பெரிதும் உதவி செய்து இருக்கிறது.
தயாரிப்பு
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது