search icon
என் மலர்tooltip icon
    < Back
    Idi Minnal Kadhal
    Idi Minnal Kadhal

    இடி மின்னல் காதல்

    இயக்குனர்: பாலாஜி மாதவன்
    எடிட்டர்:ஆண்டனி
    இசை:சாம் சி.எஸ்
    வெளியீட்டு தேதி:2024-03-30
    Points:471

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை192183191
    Point2032653
    கரு

    எதிர்பாராமல் நடைபெறும் விபத்தில் ஒன்றின் பின்னணியில் நடக்கும் கதை

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    இளம் உளவியல் சிகிச்சை மருத்துவராகப் பணியாற்றும் நாயகனுக்கும், தொழிலதிபர் ஒருவரின் மகளான நாயகிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இவர்கள் காதலிக்கும் போது... ஒரு இரவு நேரத்தில்... மழை பெய்யும் தருணத்தில்... சென்னை மாநகரின் போக்குவரத்து குறைந்த பகுதியில்.. காரில் செல்லும் போது எதிர்பாராத விதமாக இவர்கள் வாகனம் விபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் முகம் தெரியாத ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து போகிறார்.

    நாயகன் இந்த விபத்திற்கு காரணமாகியதால் அவருக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. அதனால் இவரே போலிஸிடம் சரணடைய செல்கிறார். ஆனால் இவரின் காதலி இவரைத் தடுத்து நிறுத்திகிறாள்.

    பல எதிர்ப்புகளை எதிர் கொண்டு காதலில் வெற்றிபெருவதற்காகவும், காதலியின் அம்மாவிடம் நம்பிக்கை பெறுவதற்காக சில நாட்களில் வெளிநாடு செல்லவிருக்கிறார் நாயகன். இச்சூழ்நிலையில் நாயகன் போலிஸிடம் சரணடைய சென்றால் அவர்களின் எதிர்காலத்திற்கே கேள்விக் குறியாகிவிடும்.

    விபத்தில் இறந்துப்போன நபருக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு அவனின் அப்பா என்றாள் உயிர். விபத்தில் தனது தந்தை மரணம் அடைந்ததை தாமதமாக தெரிந்து கொள்ளும் அவன் உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறான்.‌ உளவியல் சிக்கலுக்கு ஆளான பையனும்.. உளவியல் சிக்கலுக்கு சிகிச்சைப் அளிக்கும் இளம் மருத்துவரான நாயகனும் எந்த புள்ளியில் சந்திக்கிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது? என்பதுதான் இப்படத்தின் கதை.

    நடிகர்கள்

    நாயகன் சிபி சந்திரன் கதையின் ஒரு அங்கமாக நடித்துள்ளார். இவரின் காதலியாக நடித்திருக்கும் பவ்யா தரிக்கா அழகான தோற்றத்திலும், நடிப்பிலும் மக்களிடையே இடம்பிடிக்கிறார். விபத்தில் சிக்கியவனின் மகனாக நடித்திருக்கும் ஜெய் ஆத்தியா அவருக்கு கொடுக்கபட்ட கதாப்பாத்திரத்தில் மிக அழகாக நடித்துள்ளார்.

    பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாஸ்மின் பொன்னப்பா அவருக்கே உரித்தான பாணியில் சிறப்பாக நடித்துள்ளார்.

    இயக்கம்

    கதை புதிய கோணத்தில் இருந்தாலும் அதனை சுவாரசியமான திருப்பங்களுடன் சொல்லி இருந்தால் இத்திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றிருக்க கூடும். முதல் பாதி திரைக்கதை இலக்கில்லாமல் பயணிப்பதால்.. தடுமாறுகிறது. ரசிகர்களுக்கும் அயர்ச்சியை உண்டாக்குகிறது.

    இசை

    பாடல்களை விட பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது.

    தயாரிப்பு

    பாவகி என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×