என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியன் 2
- 0
- 10
- 2
வாரம் | 1 | 2 | 3 |
---|---|---|---|
தரவரிசை | 4 | 4 | 7 |
Point | 7460 | 12699 | 6524 |
ஊழல் செய்பவர்களுக்கு எதிராக மீண்டும் களம் இறங்கி இருக்கும் இந்தியன் தாத்தா கதை.
கதைக்களம்
நாயகன் சித்தார்த் தனது நண்பர்களான பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி ஆகியோருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதன் மூலம் சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். இந்நிலையில் அரசு வேலைக்கு லஞ்சம் கேட்டதால் ஒரு பெண் தற்கொலை செய்து இறந்து விடுகிறார். இதை பார்க்கும் சித்தார்த் நியாயம் கேட்டு போராடுகிறார்.
ஆனால், பலன் கிடைக்காமல் போகிறது. மேலும் சிறைக்கு செல்கிறார். காதலி ரகுல் ப்ரீத் சிங் அவர்களை விடுவித்து, உங்களால் எதுவும் முடியாது என்று கூறுகிறார். விரக்தி அடையும் சித்தார்த், இந்தியன் தாத்தா உயிருடன் இருக்கிறார் என்று உள் மனது சொல்கிறது. அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று நண்பர்களுடன் சொல்கிறார்.
அதன்படி #ComeBackIndian என்ற ஹேஷ்டேக் மூலம் தேட ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்தியன் தாத்தா கமல் ஹாசனுக்கு இந்த தகவல் சென்று சென்னை திரும்புகிறார். இவர் மீண்டும் வருவதால் ஊழல் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். ஒரு பக்கம் சிபிஐ அதிகாரி பாபி சிம்ஹா, கமல் ஹாசனை பிடிக்க முயற்சி செய்கிறார்.
இறுதியில் இந்தியன் தாத்தா கமல் ஹாசன், ஊழல் செய்பவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்? என்ன மாற்றம் நடந்தது? சிபிஐ அதிகாரி பாபி சிம்ஹா, கமல் ஹாசனை பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
இந்தியன் தாத்தாவாக மீண்டும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் கமல் ஹாசன். இந்தியன் தாத்தா மட்டுமில்லாமல் பல கெட்டப்புகளில் வந்து அசத்தி இருக்கிறார். தனக்கே உரிய ஸ்டைலில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார்.
தற்போது உள்ள இளைஞர்களின் பிரதிபலிப்பாக சித்தார்த் நடித்து இருக்கிறார். குறிப்பாக தாய் இறப்பிற்கு வருந்தும் காட்சியில் கண்கலங்க வைத்து இருக்கிறார். இவருக்கு துணையாக வரும் பிரியா பவானி சங்கர், ஜெகன், ரிஷி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். வித்தியாசமான தோற்றத்தில் நடித்து கவர்ந்து இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
இயக்கம்
ஊழல் செய்பவர்களுக்கு எதிராக படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர். இந்தியன் தாத்தா ஒருத்தர் போதாது, வீட்டில் இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களும் ஊழலுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார். பாடல்கள், ஆக்சன் காட்சிகள் என பல காட்சிகளில் பிரம்மாண்டத்தை காண்பித்திருக்கிறார். இந்தியா முழுவதும் உள்ள தொழில் அதிபர்கள் எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள், எப்படி செலவு செய்கிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். பலருக்கும் தெரியாத வர்ம கலைகளை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். விவேக், மனோபாலா ஆகியோரை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.
ஒளிப்பதிவு
ரவிவர்மனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
இசை
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.
தயாரிப்பு
லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
Join
ஏமாற்றம்!
சங்கர், கமல் இருவருக்கும் என்ன ஆச்சி?? படு மோசம்
Supar
Very
சூப்பரா இருக்கு
Innum pakkala
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்