என் மலர்


இனி ஒரு காதல் செய்வோம்
காதலித்த பெண்ணின் திருமணத்தை தடுக்க முயற்சி செய்யும் காதலனின் கதை.
கதைக்களம்
நாயகன் அஜய் பாலகிருஷ்ணா திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு படிக்க வருகிறார். நாயகி சுவிதாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் சுவிதாவிடம் தன்னுடைய காதலை சொல்லி சம்மதிக்க வைக்கிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில், ஒரு சின்ன பிரச்சனையில் இருவரும் பிரிகிறார்கள்.
சில நாட்களில் அஜய் பாலகிருஷ்ணாவின் நண்பர் சுவிதாவை திருமணம் செய்ய இருக்கிறார். இதை அறிந்த அஜய் பாலகிருஷ்ணா திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்.
இறுதியில் அஜய் பாலகிருஷ்ணாவும் சுவிதாவும் ஒன்று சேர்ந்தார்களா? இவர்களுக்குள் நடந்த பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஜய் பாலகிருஷ்ணா, நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பல இடங்களில் முக பாவனைகளை வெளிப்படுத்த கஷ்டப்பட்டு இருக்கிறார். நாயகியாக வரும் சுவிதா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். தந்தையிடம் காதலை சொன்ன பிறகும், காதலனை பிரிந்த பிறகும் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
சிறிய காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன். படம் ஆரம்பத்தில் நிழல்கள் ரவியின் குரலில் கவிதையுடன் தொடங்கியது சிறப்பு. திரைக்கதையில் சுவாரஸ்யமும், வலுவில்லாமல் இருப்பது பலவீனம்.
இசை
கெவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை அதிகம் கவரவில்லை.
ஒளிப்பதிவு
கோபிநாத் சுகுமாரின் ஒளிப்பதிவை பாராட்டலாம்.
படத்தொகுப்பு
கோவிந்த் படத்தொகுப்பு கச்சிதம்.
தயாரிப்பு
எபிக் தியேட்டர் நிறுவனம் இனி ஒரு காதல் செய்வோம் திரைப்படத்தை தயாரித்துள்ளது.