என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஜே பேபி
- 0
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 | 4 |
---|---|---|---|---|
தரவரிசை | 77 | 102 | 99 | 84 |
Point | 997 | 846 | 96 | 29 |
காணாமல் போன தாயை தேடி அலையும் மகன்களின் கதை.
கதைக்களம்
ஊர்வசிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில் ஒவ்வொருவர் வீட்டில் ஒவ்வொரு நாள் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீர் என்று ஊர்வசி காணாமல் போகிறார்.
பின்னர் ஊர்வசி கொல்கத்தாவில் இருப்பதாகவும், தமிழ் ராணுவ வீரர் மூலம் லோக்கல் போலீசுக்கு தகவல் கிடைக்கிறது. ஊர்வசியை அழைத்து வர மூத்த மகன் மாறனும், இளையமகன் தினேஷும் கொல்கத்தா செல்கிறார்கள். அங்கு சென்று பார்க்கும் போது, ஊர்வசி ஓடிவிட்டதாக சொல்கிறார்கள்.
இறுதியில் மாறன் மற்றும் தினேஷ் இருவரும் ஊர்வசியை கண்டு பிடித்தார்களா? வீட்டை விட்டு ஊர்வசி வெளியேற காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
பேபியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி, குழந்தை உள்ளம் படைத்த முதியவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். வெகுளித்தனத்தில் காமெடியும், பாசத்தில் நெகிழ்ச்சியும், சென்டிமென்ட்டில் கண் கலங்கவும் வைத்திருக்கிறார். முழு கதையும் தன் தோளில் சுமந்து நடித்து இருக்கிறார்.
ஊர்வசியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மாறன், காமெடியை தாண்டி தன்னை குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்து இருக்கிறார். இளைய மகனாக நடித்திருக்கும் தினேஷ், தனக்கே உரிய யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஊர்வசியை அடித்து விட்டு வருந்தும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். ராணுவ வீரரான சேகர் நாராயணன், எந்தவித அனுபவமும் இல்லாமல் சிறப்பான நடிப்பை கொடுத்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார்.
இயக்கம்
தனது குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. அதிக சினிமாத்தனம் இல்லாமல் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தி பார்வையாளர்களை கண்கலங்க வைத்து இருக்கிறார்.
பிள்ளைகள் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் அம்மாக்கள், வயதான பிறகு பிள்ளைகள் மீது அவர்களின் எதிர்பார்ப்பு எத்தகையது, அதை பற்றி எந்தவித யோசனையும் இன்றி பிள்ளைகள் சாதாரணமாக கடந்து செல்வது, அதனால் அம்மாக்களின் மனம் எத்தகைய நிலைக்கு தள்ளப்படுகிறது என்பதை ஊர்வசியின் நடிப்பின் மூலமாக அழகாக சொல்லி இருக்கிறார்.
இசை
டோனி பிரிட்டோவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோடு பயணித்து ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவு சிறப்பு.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்