என் மலர்tooltip icon
    < Back
    Japan
    Japan

    ஜப்பான்

    இயக்குனர்: ராஜு முருகன்
    எடிட்டர்:பிலோமின் ராஜ்
    ஒளிப்பதிவாளர்:ரவி வர்மா
    இசை:ஜிவி பிரகாஷ் குமார்
    வெளியீட்டு தேதி:10 Nov 2023
    Points:7864

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை463776
    Point24704633761
    கரு

    கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    கோவையில் பெரிய நகைக்கடையில் பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கபடுகிறது. இந்த கொள்ளையை கார்த்தி தான் செய்திருப்பதாக நினைத்து போலீஸ் தீவிரமாக அவரை தேடுகிறது.

    இந்நிலையில் கார்த்தி எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுகிறார். இதனால், தான் கொள்ளையடித்த நகைகளை ஏழை மக்களுக்கு கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் போலீசிடம் கார்த்தி சிக்க, தான் அந்த நகைகளை கொள்ளையடிக்கவில்லை என்று மறுக்கிறார்.

    இறுதியில் அந்த நகைகளை கொள்ளையடித்தது யார்? போலீசில் இருந்து கார்த்தி தப்பித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் கார்த்தி, வித்தியாசமான தோற்றம், உடை, நடை என படம் முழுக்க பயணிக்கிறார். கிளைமாக்ஸ் அம்மா சென்டிமென்ட் காட்சியில் கவர்ந்து இருக்கிறார். சண்டைக் காட்சியில் சிறப்பான முயற்சி செய்து இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் அனு இம்மானுவேல் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

    நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து இருக்கும் ஜித்தன் ரமேஷ் நடிப்பு அருமை. போலீசாக வரும் சுனில், விஜய் மில்டன், ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    கொள்ளையை மையமாக வைத்து அதில் காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், அரசியல் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

    இசை

    ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோடு பயணித்து இருக்கிறது. பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    ரவி வர்மனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

    படத்தொகுப்பு

    பிலோமின் ராஜ் படத்தொகுப்பு கவர்கிறது.

    காஸ்டியூம்

    பிரவீன் ராஜா காஸ்டியூம் டிசைனில் கலக்கியிருக்கிறார்.

    புரொடக்‌ஷன்

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ‘ஜப்பான்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    20 Dec 2023
    vigneshwari kumar

    23 Nov 2023
    Baby Gillba

    Okay

    ×