என் மலர்tooltip icon
    < Back
    Jawan
    Jawan

    ஜவான்

    இயக்குனர்: அட்லி
    எடிட்டர்:ஆண்டனி எல் ரூபன்
    ஒளிப்பதிவாளர்:ஜி.கே. விஷ்ணு
    இசை:அனிருத் ரவிச்சந்தர்
    வெளியீட்டு தேதி:7 Sept 2023
    Points:15423

    ட்ரெண்ட்

    வாரம்1234567
    தரவரிசை13242836392622
    Point48556545288267222716676
    கரு

    நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கும் இளைஞன் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    ஜெயிலராக இருக்கும் நாயகன் ஷாருக்கான் (ஆசாத்) மாறுவேடத்தில் பெண் கைதிகளை வைத்து மெட்ரோ ரயிலை கடத்துகிறார். பயணிகளை பணய கைதிகளாக வைத்து தொழிலதிபர் விஜய் சேதுபதியிடம் இருந்து பல ஆயிரம் கோடி வாங்கி விவசாய கடனை அடைகிறார். அதன்பின் சுகாதார துறை அமைச்சரை கடத்தி இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளை சீரமைக்கிறார். ஷாருக்கானை பிடிக்க சிறப்பு படை அதிகாரியாக இருக்கும் நயன்தாரா முயற்சி செய்கிறார். மற்றொரு பக்கம் விஜய் சேதிபதியின் கும்பல் அவரை கொல்ல திட்டம் போடுகிறார்கள்.

    இந்நிலையில் நயன்தாராவை ஏமாற்றி ஷாருக்கான் திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் கும்பல் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா இருவரையும் கடத்துகிறது. அப்போது மற்றொரு ஷாருக்கான் (விக்ரம் ரதோர்) வந்து ஷாருக்கானை (அசாத்) கடத்தி செல்கிறார்.

    இறுதியில் ஷாருக்கான் (விக்ரம் ரத்தோர்) யார்? ஷாருக்கான் (அசாத்) என்ன ஆனார்? ஷாருக்கான் நல்லது செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஷாருக்கான் நடிப்பில் மாஸ் காண்பித்திருக்கிறார். ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். பாடல் காட்சிகளில் அழகாக இருக்கிறார். இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து கொடுத்து இருக்கிறார்.

    இவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்து இருக்கிறார் நயன்தாரா. சிறப்பு படை அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

    தனக்கே உரிய பாணியில் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. வித்தியாசமான இவரது தோற்றம் ரசிக்க வைக்கிறது. ஆயுதங்கள் சப்ளை செய்யும் தொழிலதிபராக மனதில் பதிகிறார். இடைவெளிக்கு பிறகு வரும் தீபிகா படுகோனே அழகாக வந்து அழுத்தமான நடிப்பை பதிவு செய்து இருக்கிறார். பிரியாமணி, ஜாபர் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். சிறப்பு தோற்றத்தில் வந்து அசத்தி இருக்கிறார் சஞ்சய் தத்.

    இயக்கம்

    கமர்ஷியல் படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களை கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அட்லீ. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். கதாபாத்திரங்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருப்பது சிறப்பு. பல காட்சிகள் பிரமாண்டமாகவும் ரசிக்கும்படியும் எடுத்து இருக்கிறார். சமூக அக்கறையுடன் படத்தை இயக்கி இருக்கும் அட்லீக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.

    இசை

    அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். காட்சிகள் அனைத்தையும் இவரது இசை தாங்கி பிடித்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    விஷ்ணுவின் ஒளிப்பதிவு வாவ் சொல்ல வைக்கிறது.

    படத்தொகுப்பு:

    ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

    புரொடக்‌ஷன்:

    ரெட் சில்லீஸ் நிறுவனம் ‘ஜவான்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.



    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    19 Feb 2024
    Shiva

    next level

    23 Nov 2023
    Baby Gillba

    Nice

    ×