என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஜோ
- 1
- 0
- 0
வாரம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
---|---|---|---|---|---|---|---|---|---|
தரவரிசை | 78 | 61 | 49 | 22 | 18 | 15 | 4 | 1 | 10 |
Point | 968 | 1933 | 965 | 987 | 520 | 229 | 446 | 371 | 11 |
மனவேதனையால் வழி மாறிபோகும் இளைஞன் குறித்த கதை.
கதைக்களம்
ராமேஸ்வரத்தில் பள்ளி படிப்பை முடித்த நாயகன் ரியோ, கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படிக்கிறார். நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் இவர், கேரளாவில் இருந்து படிக்க வரும் நாயகி மாளவிகா மனோஜை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். மனசுக்குள்ளே காதலித்து வரும் ரியோ, ஒரு கட்டத்தில் தன் காதலை வெளிப்படுத்தி மாளவிகாவை சம்மதிக்க வைக்கிறார்.
இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள். கல்லூரி படிப்பை முடித்தவுடன் இருவரும் பிரிய நேருகிறது. இந்த பிரிவில் காதல் வளரும் என்று நினைத்தால் இருவரும் ஈகோவால் அடிக்கடி சண்டைபோட்டுக் கொள்கிறார்கள்.
ஒருவழியாக சமாதானம் ஆனபின் மாளவிகாவின் பெற்றோரை சந்திக்கும் ரியோ, அங்கு சில குழப்பங்களால் ரியோவை தவறாக புரிந்துக்கொண்டு காதலை முடித்துக்கொள்கிறார் மாளவிகா.
மாளவிகாவிற்கு வேறொருவரை திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். ஆனால், மாளவிகா திருமணம் செய்யும் நேரத்தில் தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். மனவேதனை அடையும் ரியோ போதைக்கு அடிமையாகிவிடுகிறார்.
இறுதியில் ரியோவின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரியோ, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். சில இடங்களில் உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக காதலை வெளிப்படுத்தும் நேரத்திலும், காதலி இறந்த நேரத்திலும் கவனிக்க வைத்து இருக்கிறார்.
நாயகியாக வரும் மாளவிகா மனோஜ் சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் பாவ்யா அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். ரியோவின் நண்பர்களாக வருபவர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரிஹரன் ராம். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். இரண்டாம் பாதி திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதுபோல் ஒரு சில காட்சிகள், மற்ற படங்களின் சாயல் தெரிகிறது. இதை தவிர்த்து இருக்கலாம்.
இசை
சித்து குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். காட்சிகளுக்கு ஏற்றார் போல் பின்னணி இசையை கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
படத்திற்கு பெரிய பலம் ராகுல் கேஜி விக்னேஷின் ஒளிப்பதிவு. கேரள அழகை நம் கண் முன்னே நிறுத்தி இருக்கிறார்.
படத்தொகுப்பு
வருண் படத்தொகுப்பு அருமை.
காஸ்டியூம்
ஸ்ரீ தேவி கோபால கிருஷ்ணன் காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.
புரொடக்ஷன்
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் ‘ஜோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்