என் மலர்


ஜோஷ்வா இமை போல் காக்க
போதை பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து நாயகியை காப்பாற்றும் நாயகனின் கதை.
கதைக்களம்
நியூயார்க் நகரில் வசிக்கும் நாயகி ராஹி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு நீதிமன்றம் வாயிலாக தண்டனை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார். இதற்கு பழிதீர்க்கும் வகையில், போதை பொருள் கடத்தல் கும்பல் காரர்கள் ராஹியை கடத்த முயற்சிக்கின்றனர். இதனால் சென்னை வரும் ராஹிக்கு நாயகன் வருண் பாதுகாப்பாளராக இருக்கிறார்.
இடையில் ராஹியை கொல்ல வரும் போதை பொருள் கும்பலிடம் இருந்து காப்பாற்றுகிறார் வருண். ஒரு கட்டத்தில் போதை பொருள் கடத்தல் தலைவன் யார் என்ற விவரம் ராஹி மற்றும் வருணுக்கு தெரியவருகிறது.
இறுதியில் ராஹியை வருண் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகன் வருண் கதைக்கு ஏற்ற வகையில் ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி ராஹி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். விசித்திரா, லிஸி அந்தோனி, மன்சூர் அலிகான், திவ்யதர்ஷினி, கிருஷ்ணா ஆகியோரும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
படத்தின் முதல் பாதி கதையை விளக்கும் காட்சிகளுடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில் பெண்ணை எப்படி காப்பாற்றுவது என்ற விஷயத்தை மையப்படுத்தி செல்கிறது. இதில் ஆக்ஷன் மற்றும் விறுவிறு காட்சிகள் திரைக்கதையில் வேகத்தை உணர செய்கிறது. வழக்கமான கௌதம் மேனன் படங்களை போன்றே ஜோஷூவாவிலும் அதிகளவு ஆங்கிலம் பேசும் கதாபாத்திரங்கள், அழகமான காட்சிகள், பைக் ரைடு, காதல், அழகான நாயகி உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்துள்ளன.
இசை
கார்த்திக் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. பின்னணி இசை படத்திற்கு பலம் கூட்டியுள்ளது.
ஒளிப்பதிவு
ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி ரோமான்சிலும் எஸ்.ஆர்.கதிர் லென்ஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
Nice movie
Nice movie