என் மலர்tooltip icon
    < Back
    kaaduvetty
    kaaduvetty

    காடுவெட்டி

    இயக்குனர்: சோலை ஆறுமுகம்
    எடிட்டர்:ஜான் ஆபிரகாம்
    இசை:வணக்கம் தமிழா சாதிக்
    வெளியீட்டு தேதி:15 March 2024
    Points:3531

    ட்ரெண்ட்

    வாரம்123456
    தரவரிசை10379921189468
    Point94320654842496
    கரு

    சாதி பெருமை பேசும் ஊர்க்காரர்களால் ஒரு தந்தை எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார். மேலும் அரசியல் தலைவருடன் இணைந்து போராட்டம், ஆர்பாட்டத்தில் ஈடுபடுகிறார். அவ்வப்போது சிறைக்கும் செல்கிறார்.

    இதனிடையே, தெருக்கூத்து கலைஞரான சுப்பிரமணிய சிவாவின் மகள் வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவரை காதலிக்கிறார். இந்த விஷயம் தெரிந்தபிறகு ஊர் வழக்கப்படி கொலை செய்துவிடுமாறும், இல்லை என்றால் அவள் தனக்கு பிறக்கவில்லை என்று சொல்ல வேண்டும் என்றும் பஞ்சாயத்து வற்புறுத்துகிறது.

    பஞ்சாயாத்துக்கு கட்டுப்பட்டு சுப்பிரமணிய சிவா பெற்ற மகளை என்ன செய்தார்?, ஆர்.கே.சுரேஷ், இந்த பெண் விஷயத்தில் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகனாக நடித்துள்ள ஆர்.கே. சுரேஷ் வில்லன் கலந்த நல்லவனாக நடித்து இருக்கிறார். நடிப்பில் பெரிய வித்தியாசம் இல்லை. எப்போதும் முறைத்துக் கொண்டு இறுக்க முகத்துடன் வலம் வந்து இருக்கிறார்.

    தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கும் சுப்பிரமணி சிவா, பெற்ற பிள்ளைகளை பறிகொடுக்கும் பெற்றோர்களை பிரதிபலிக்கும் வேடத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா பாண்டிலட்சுமி, விஷ்மயா விஷ்வாந்த், சாந்தி மாறன், சுப்பிரமணியம், அகிலன், சுபாஷ் சந்திரபோஸ், ஜெயம் எஸ்.கே,கோபி, சங்கீர்த்தனா விபின் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    நாடக காதலை மையக்கருவாக கொண்டு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் சோலை ஆறுமுகம். தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலை சம்பவங்களை வேறுமாதிரி சித்தரித்து காட்சிப்படுத்தி இருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    இசை

    வணக்கம் தமிழா சாதிக் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஶ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை சிறப்பு.

    ஒளிப்பதிவு

    எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கிறது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    23 March 2024
    Tamilan Kumar

    ×