என் மலர்
கழுமரம்
- 0
- 0
- 0
வாரம் | 1 |
---|---|
தரவரிசை | 300 |
Point | 63 |
சினிமா ஆசையால் செய்யும் வேலையை விட்டு அவதி படம் இளைஞன்.
கதைக்களம்
கிராமத்தில் தியேட்டர் மற்றும் போஸ்டர் ஒட்டும் வேலை பார்த்து வந்த கொட்டாச்சி, திரைப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகிறார். நல்ல கதை ஒன்றை வைத்துக்கொண்டு மூன்று நான்கு வருடமாக வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில் ஒரு தயாரிப்பாளர் கொட்டாச்சியின் கதை கேட்டு படம் தயாரிக்க முன் வருகிறார். ஆனால் படத்தை வேறொரு இயக்குனர் இயக்க வேண்டும் என்று சொல்கிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் கொட்டாச்சி.
தயாரிப்பாளரின் நண்பர் கொட்டாச்சியின் படத்தை தயாரிக்க விருப்படுகிறார். இது அந்த தயாரிப்பாளருக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. படத்தை தடுக்க முயற்சிகளை செய்கிறார்.
இறுதியில் கொட்டாச்சி தான் விரும்பிய படத்தை இயக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கொட்டாச்சி முழு கதையும் தாங்கி நிற்கிறார். தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஆனால், பல இடங்களில் இவரது நடிப்பு செயற்கையாகவும் அமைந்து இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் பெரியதாக மனதில் பதியவில்லை.
இயக்கம்
கொட்டாச்சியே இப்படத்தை இயக்கவும் செய்து இருக்கிறார். திரையில் படத்தை இயக்குவது போல் அமைத்து, அதையே படமாக்கி இருக்கிறார்கள். இது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திரைக்கதை அழுத்தமாக இல்லாமல் செல்கிறது. நல்ல கதைதான் என்றாலும் அதை சொல்ல வந்த விதம் தெளிவாக இல்லை.
இசை
ரோஷன் மதேவ்ஸ் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.