என் மலர்tooltip icon
    < Back
    Kick
    Kick

    கிக்

    இயக்குனர்: பிரசாந்த் ராஜ்
    எடிட்டர்:நாகூரன் ராமச்சந்திரன்
    ஒளிப்பதிவாளர்:சுதாகர்.எஸ்.ராஜ்
    இசை:அர்ஜுன் ஜன்யா
    வெளியீட்டு தேதி:1 Sept 2023
    Points:2797

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை8410817711484
    Point13731349272820
    கரு

    ரொமான்ஸ் கலந்த காதல் கதையை மையமாக கொண்ட படம்

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    தம்பி ராமையா நடத்தி வரும் விளம்பர கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் சந்தானம். அதுபோல் மனோபாலா நடத்தி வரும் விளம்பர கம்பெனியில் தான்யா ஹோப் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்குள் விளம்பரம் பிடிப்பதில் போட்டி ஏற்படுகிறது. ஒரு கார் விளம்பரத்திற்காக சந்தானம் கோல்மால் செய்து விளம்பரம் பிடிக்கிறார். இதனால் கோப்படும் தான்யா ஹோப், கவுன்சிலில் புகார் கொடுக்கிறார்.

    அதன்பின் தான்யாவை நேரில் பார்க்கும் சந்தானம் அவர் மீது காதல் வயப்படுகிறார். தான்யாவிடம் வேறொரு பெயரில் பழகி, தன்னுடன் காதல் வயப்பட வைக்கிறார் சந்தானம்.

    தான்யாவை உண்மையாகக் காதலிக்கத் தொடங்கும் சந்தானம், ஒரு கட்டத்தில் உண்மையை சொல்லிவிட முயற்சிக்கும் நேரத்தில், தான் ஏமாற்றப்படுவது தெரிந்து மனமுடைகிறார் தான்யா ஹோப்.

    இறுதியில் சந்தானம், தான்யா ஹோப் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சந்தானம் வழக்கம்போல் டைமிங் காமெடி, பாடிலேங்குவேஜ் என குறைய இல்லாமல் செய்திருக்கிறார். கதாநாயகியாக நடித்து இருக்கும் தான்யா ஹோப் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    எம்.ஜே.வாக வரும் தம்பி ராமையா மைக்கேல் ஜாக்சன் பெயரை வைத்து அவரைப் போல் இமிடேட் செய்து கடுப்பேற்றி இருக்கிறார். அதுபோல் கோவை சரளா ரீல்ஸ் போடுகிறேன் என்று ரசிகர்களை கதற வைத்து இருக்கிறார். மனோபாலா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் காமெடி என்ற பெயரில் ரசிகர்களை சோதித்து இருக்கிறார்கள்.

    இயக்குனர்

    காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராஜ். ஆனால், காமெடி படத்தில் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. படம் முழுக்க டபுள் மீனிங் காமெடியை வேண்டும் என்றே திணித்தது போல் இருக்கிறது.

    இசை

    அர்ஜுன் ஜான்யா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பழைய படங்களின் பின்னணி இசையை படத்தில் போட்டு இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    சுதாகரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

    படத்தொகுப்பு

    நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பரவாயில்லை.

    காஸ்டியூம்

    பரத் மற்றும் நந்தா எஸ்.டி.ஆர். காஸ்டியூம் டிசைனில் நடிகர்கள் அழகாக தெரிகின்றனர்.

    புரொடக்‌ஷன்

    பார்டியூன் பிலிம்ஸ்  ’கிக்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×