என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லியோ
- 25
- 31
- 6
வாரம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தரவரிசை | 1 | 1 | 1 | 1 | 8 | 4 | 7 | 11 | 2 | 2 |
Point | 12692 | 17698 | 13573 | 7463 | 1285 | 1002 | 237 | 46 | 63 | 52 |
விஜய்க்கு தன் தோற்றத்தால் வரும் பிரச்சனை குறித்த கதை.
கதைக்களம்
விஜய் (பார்த்திபன்) தன் மனைவி திரிஷா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இமாசலப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கு சாக்லேட் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் விலங்குகளை பாதுகாக்கும் முயற்சியிலும் ஈடுப்பட்டு வருகிறார்.
ஒருநாள் திருடர்களான மிஷ்கின் மற்றும் சாண்டி, விஜய் சாக்லேட் கடைக்கு சென்று ஊழியர்களை துப்பாக்கி முனையில் நிற்க வைத்து பணம் பறிக்க முயல்கிறார்கள். அப்போது விஜய் பிரச்சனை வேண்டாம் என்று பணத்தை கொடுத்து முடித்துவிட பார்க்கிறார். ஆனால், அவர்களின் அட்டகாசம் எல்லை மீறவே விஜய் அவர்களின் துப்பாக்கியால் அவர்களை கொன்றுவிடுகிறார்.
இதனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. விஜய் தற்காப்புக்காக தான் இந்த கொலையை செய்தார் என்று நிரூபணமாகி அவர் விடுவிக்கப்படுகிறார். அதுவரை உலகிற்கு யார் என்று தெரியாமல் இருந்த விஜய் இந்த வழக்கு மூலம் பிரபலமாகிறார். மேலும் இவரது புகைப்படம் பத்திரிகை மற்றும் செய்திகளில் வெளியிடப்படுகிறது. இந்த புகைப்படம் சஞ்சய் தத் கையில் கிடைக்கவே லியோ தாஸ் (விஜய்) போன்று இருக்கும் விஜய்யை (பார்த்திபன்) தேடி சஞ்சய் தத் வருகிறார்.
இறுதியில் விஜய்யை தேடி சஞ்சய் தத் ஏன் வருகிறார்? லியோ தாஸுக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
வழக்கம் போல் விஜய் இந்த படத்திலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். பார்த்திபன் மற்றும் லியோ தாஸ் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே வேறுபாடு காண்பித்து நியாயம் செய்துள்ளார். காதல், அன்பு, ஆக்ஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். முழு படத்தையும் தன் தோளில் சுமந்துள்ளார்.
வில்லனாக திரையை ஆக்கிரமித்துள்ள சஞ்சய் தத் தன் மிரட்டும் நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மனைவியாக வரும் திரிஷா, விஜய்க்கு உறுதுணையாக இருக்கிறார். மேலும் அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
லோகேஷ் படம் என்றாலே சொல்லவா வேண்டும் என்பது போல இந்த படத்தையும் இயக்கியுள்ளார். திரைப்பிரபலங்களை எல்லாம் தன் படத்தில் இறக்கி மாஸ் காட்டியுள்ளார். முதல் பாதியில் எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டு இரண்டாம் பாதியில் சற்று சலிப்பை ஏற்படுத்தியுள்ள திரைக்கதை வருத்தமளிக்கிறது. திரிஷா -விஜய்யின் காட்சியை இன்னும் அழுத்தமக அமைத்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளை உலக தரத்தில் அமைத்துள்ளனர். குறிப்பாக ஹைனா வரும் காட்சிகள் நிஜமாகவே ஹனா இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இசை
அனிருத் இசையில் மிரட்டியுள்ளார். இவர் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
மனோஜ், இமாசலப்பிரதேசத்தின் அழகை தன் ஒளிப்பதிவு மூலம் கவரும் வகையில் காட்டியுள்ளார்.
படத்தொகுப்பு
பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் அசத்தியுள்ளார்.
காஸ்டியூம்
பல்லவி சிங், ஏகா லகானி, பிரவீன் ராஜா காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.
சவுண்ட் எபெக்ட்
கண்ணன் கணபத் சவுண்ட் மிக்ஸிங் அருமை.
புரொடக்ஷன்
செவன் ஸ்கிரீன் நிறுவனம் ‘லியோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.
Average
Super 😍👍👍👍👍👍👍
Movie is too good
Good entertainment movie
Good entertainment movie
Super
nice
nice
ceate user review
nice movie
good movie
d
d
d
mjk
test
nice review
test
nice
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்