search icon
என் மலர்tooltip icon
    < Back
    Locker
    Locker

    லாக்கர்

    இயக்குனர்: ராஜசேகர் நட்ராஜன் & யுவராஜ் கண்ணன்
    எடிட்டர்:ஸ்ரீகாந்த் கனபர்த்தி
    ஒளிப்பதிவாளர்:தணிக்கை தாசன்
    இசை:வைகுந்த் சீனிவாசன்
    வெளியீட்டு தேதி:2023-11-24
    Points:81

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை274
    Point81
    கரு

    பணத்திற்காக மற்றவர்களை ஏமாற்றும் இளைஞன் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகன் விக்னேஷ் சண்முகம் தனது நண்பர்களுடன் இணைந்து திருட்டு, மற்றவர்களை ஏமாற்றும் வேலைகளை செய்து வருகிறார். ஒருநாள் நாயகி நிரஞ்சனி அசோகனை ஹோட்டலில் சந்திக்கும் விக்னேஷ், அவர் மீது காதல் வயப்படுகிறார்.

    நிரஞ்சனியை  துரத்தி துரத்தி காதலிக்கும் விக்னேஷ், ஒரு கட்டத்தில் அவரை காதலிக்க வைக்கிறார். ஒருநாள் விக்னேஷ் வீட்டிற்கு செல்லும் நிரஞ்சனிக்கு அவர் மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது தெரியவருகிறது. இதனால் கோபமடையும் நிரஞ்சனி, விக்னேஷுடன் சண்டை போட்டு பிரிகிறார்.

    இனிமேல் யாரையும் ஏமாற்றமாட்டேன் என்று கூறி நிரஞ்சனியை சமாதானம் செய்கிறார் விக்னேஷ். இந்நிலையில் நிரஞ்சனி விக்னேஷிடம் ஒருவரை ஏமாற்ற சொல்கிறார்.

    இறுதியில் நிரஞ்சனி சொல்பவரை விக்னேஷ் ஏமாற்றினாரா? நிரஞ்சனி ஏமாற்ற சொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் சண்முகம் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் பேசும் வசனமும், நடிப்பும் மற்றொரு நடிகரை நியாபகப்படுத்துகிறது. நாயகியாக நடித்து இருக்கும் நிரஞ்சனி, கோபம், காதல், சோகம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். விக்னேஷ் நண்பர்களாக வருபவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். இவர்களின் காமெடி படத்திற்கு பெரியதாக எடுபடவில்லை.

    இயக்கம்

    திருட்டு, குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது, ஏமாற்றி பணம் சம்பாதிப்பது, காதல், பழிவாங்குதல் என படத்தை இயக்கி இருக்கிறார்கள் இயக்குனர் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன். படம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக திரைக்கதை நகர்கிறது. கொஞ்சம் லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம்.

    இசை

    வைகுந்த் சீனிவாசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    தணிக்கை தாசனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    படத்தொகுப்பு

    ஸ்ரீகாந்த் கனபர்த்தி படத்தொகுப்பு ஓகே.

    காஸ்டியூம்

    ஈகா பிரவீன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்.

    புரொடக்‌ஷன்

    நாராயணன் செல்வம் புரொடக்‌ஷன் நிறுவனம் ‘லாக்கர்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2023-12-21 07:34:25.0
    abhishek

    ×