என் மலர்tooltip icon
    < Back
    Lover
    Lover

    லவ்வர்

    இயக்குனர்: பிரபு ராம் வியாஸ்
    எடிட்டர்:பரத் விக்ரமன்
    ஒளிப்பதிவாளர்:ஷ்ரேயாஸ் கிருஷ்ணா
    இசை:ஷான் ரோல்டன்
    வெளியீட்டு தேதி:9 Feb 2024
    ஓ.டி.டி தேதி:8 March 2024
    Points:7970

    ட்ரெண்ட்

    வாரம்12345678
    தரவரிசை6954423834352018
    Point179132111847646247989337
    கரு

    காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனை குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    கதாநாயகன் மணிகண்டன் வேலைக்கு எதுவும் செல்லாமல் கஃபே வைக்க வேண்டும் என்ற முயற்சியில் அலைந்து கொண்டிருக்கிறார். இவரது காதலி ஸ்ரீ கவுரி பிரியா ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடக்கிறது. இருவரும் பேசாமல் இருக்கின்றனர்.

    இந்த நேரத்தில் மணிகண்டன் தனக்கென்று ஒரு வேலையை தேடிக்கொண்டு வேலை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் மீண்டும் கஃபே வைக்கும் முயற்சியில் இறங்கவே இவருக்கு வேலை போய்விடுகிறது. இதை தன் காதலி கவுரியிடம் சொல்லாமல் மறைக்கிறார்.

    இது ஒருபுறம் இருக்க கவுரி தன் மன அழுத்தத்தை குறைப்பதற்காக மணிகண்டனிடம் சொல்லாமல் நண்பர்களுடன் வெளியூர்களுக்கு ட்ரிப் செல்கிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் உண்மை தெரிந்துவிடுகிறது.

    இறுதியில் இவர்களது காதல் என்ன ஆனது? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    மணிகண்டன் வித்தியாசமான நடிப்பை கொடுத்து கைதட்டல் பெறுகிறார். இவரை திரையில் பார்க்கும் பொழுது அந்த பெண்ணை கொடுமைப்படுத்த வந்துட்டான் என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு கதாபாத்திரத்தை முழுமையாக புரிந்து நடித்துள்ளார். தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.

    நாயகியாக வரும் ஸ்ரீ கவுரி பிரியா அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். டாக்ஸிக்கான உறவில் இருக்கும் பெண்கள் படும் பாட்டை தன் நடிப்பின் மூலம் கண் முன் கொண்டு வந்துள்ளார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    இயக்குனர் பிரபுராம் வியாஸ் திரைக்கதை மற்றும் வசனத்தை சிறப்பாக எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு இளைஞன் தான் காதலிக்கும் பெண்ணை அதிகாரம் செய்தால் அவள் மனநிலை எப்படி மாறும் என்பதை தெளிவாக காட்டியுள்ளார். சில காதலர்களின் வாழ்க்கையுடன் ஒத்துப்போகும் அளவிற்கு திரைக்கதை அமைந்துள்ளது.

    இசை

    ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

    ஒளிப்பதிவு

    ஸ்ரேயாஸ் கிருஷ்ணா காட்சிகளை அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    படத்தொகுப்பு

    பரத் விக்ரமன் படத்தொகுப்பு கவர்கிறது.

    காஸ்டியூம்

    நவா ராஜ்குமார் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூமை டிசைன் செய்துள்ளார்.

    புரொடக்‌ஷன்

    மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து ‘லவ்வர்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    9 Feb 2024
    Jaya Raj

    ×