search icon
என் மலர்tooltip icon
    < Back
    லக்கி பாஸ்கர் : Lucky Baskhar Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    லக்கி பாஸ்கர் : Lucky Baskhar Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    லக்கி பாஸ்கர்

    இயக்குனர்: வெங்கி அட்லூரி
    எடிட்டர்:நவின் நூலி
    ஒளிப்பதிவாளர்:நிமிஷ் ரவி
    இசை:ஜிவி பிரகாஷ் குமார்
    வெளியீட்டு தேதி:2024-10-31
    Points:2109

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை62115
    Point1419690
    கரு

    ஒரு சாதாரண வங்கி ஊழியரின் பொருளாதர வளர்ச்சியின் கதை.

    விமர்சனம்

    கதைக்கரு

    இப்படத்தின் கதைக்களம் 1980 களில் நடப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது .துல்கர் சல்மான் ஒரு தனியார் வங்கி ஊழியராக சாதாரண லோவர் மிடில் கிளாஸ் வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு அன்பான மற்றும் அழகான மனைவி மற்றும் மகன் இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையையும் தன் குடும்பத்தின் அத்தியாவசிய தேவை மற்றும் மகனின் சிறுசிறு ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாத பொருளாதார சூழ்நிலையில் இருக்கிறார் துல்கர். ஆனால் இவர் வேலை பார்க்கும் வங்கியில் இவருக்கு மிக நல்லவன் மற்றும் நேர்மையானவன் என்ற பெயர் இருக்கிறது.

    அப்பொழுது துல்கர் வாழ்க்கையில் ராம்கி நுழைகிறார். ராம்கி வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் மற்றும் சாதனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்தி வியாபாரம் செய்பவர். ராம்கி-க்கு 2 லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அதனால் துல்கர் வேலைப்பார்க்கும் வங்கியில் கடன் உதவி கேட்கிறார் ஆனால் வங்கி அவருக்கு தர மறுக்கிறது. அப்பொழுது துல்கர் வங்கியில் இருந்து யாருக்கும் தெரியாமல் ராம்கி க்கு பணத்தை கொடுக்கிறார். பின் அதேப் போல் ராம்கி பிஸ்னஸ் செய்து அதற்கு ஒரு கமிஷனை துல்கருக்கு கொடுக்கிறார். இப்படியே இந்த பணமாற்றங்கள் அடிக்கடி நடைப்பெற்று வருகிறது. இதனால் ராம்கியின் பிஸ்னசும் , துல்கரின் கமிஷன் வருமானமும் உச்சத்திற்கு செல்கிறது. இதன்மூலம் துல்கர் ஒரு பணக்கார வாழ்க்கையை வாழ தொடங்குகிறார்.

    இச்சூழ்நிலையில் ராம்கிக்கு 10 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. இவ்வளவு பெரிய பணத்தை ரிஸ்க் எடுத்து துல்கர் வங்கியில் இருந்து எடுத்துக் கொடுக்கிறார். ராம்கி 3 உயர்ரக சொகுசு கார்களை இங்கு விற்பதற்காக இந்த பணத்தை கேட்கிறார். ஆனால் அந்த காரை வாங்கும் நபர் ராம்கியை ஏமாற்றி விடுகிறார். இது ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்குகிறது. குறிபிட்ட காலத்தில் பணத்தை ராம்கினால் கொடுக்க இயலவில்லை. இதனால் துல்கர் வாழ்க்கையில் நடந்த மாற்றம் என்ன? வங்கிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்? சம்பாதித்த இந்த பணமெல்லாம் என்ன ஆகப் போகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    துல்கர் சல்மான் வழக்கம் போல் நடிப்பில் அதிரடி காட்டியுள்ளார். பணம் இல்லாத போது அந்த வறுமையின் வெளிப்பாடு. பணக்காரன் ஆகும்போது அந்த தொணி என வித்தியாசத்தை காட்டி பார்வையாளர்களை நடிப்பால் கட்டிப் போடுகிறார். மனைவியாக நடித்து இருக்கும் மீனாட்சி சவுத்ரி அளவான அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகனாக நடித்து இருக்கும் ரித்விக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். ராம்கி அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    இயக்கம்

    ஒரு சாதாரண வங்கி ஊழியருக்கு பெரும் பணத்தால் ஏற்படும் வாழ்க்கை மாற்றத்தை படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் வெங்கட் அட்லுரி. தான் எடுத்துக் கொண்ட கதைக்களத்தை மிக கட்சிதமான திரைக்கதையுடன் இயக்கியதற்கு பாராட்டுகள். படத்தின் காட்சியமைப்பில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் அது பெரிதாக படத்தை பாதிக்கவில்லை. முக்கியமாக துல்கர் நகை வாங்கும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த காட்சி திரையரங்கை அதிர வைக்கிறது.

    இசை

    ஜி.வி பிரகாஷின் இசை படத்தின் கூடுதல் பலம். லக்கி பாஸ்கர் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது.

    ஒளிப்பதிவு

    நிமிஷ் ரவி 1980 காலகட்டத்தில் நடக்கும் இக்கதையை மிகவும் நம்பகத்தன்மையுடன் எடுத்துள்ளார்.

    தயாரிப்பு

    சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2024-11-03 10:59:28.0
    KALI RAJ

    ×