என் மலர்


லக்கி மேன்
அதிர்ஷ்டத்தை நம்பி வாழும் மனிதனின் வாழ்க்கை என்னவாகிறது என்பது குறித்த கதை.
கதைக்களம்
மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வரும் யோகிபாபு, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இடைத்தரகராக வேலை பார்த்து வருகிறார்.
சிறுவயதில் இருந்தே தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று நினைத்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபுக்கு, குலுக்கல் சீட்டில் கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது. அந்த கார்தான் தனது முதல் அதிர்ஷ்டம் என்று கொண்டாடும் யோகிபாபுக்கு, வாழ்க்கை மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கிறது.
ஒருநாள் யோகிபாபுக்கும் போலீஸ் அதிகாரி வீராவுக்கும் சிறிய பிரச்சினை ஏற்படுகிறது. இந்நிலையில், யோகிபாபு லக்கி என்று நினைக்கும் கார் திடீரென்று காணாமல் போகிறது. அதன்பின் குடும்பமும் பிரிகிறது.
இறுதியில் யோகிபாபுக்கு கார் கிடைத்ததா? யோகிபாபுவின் வாழ்க்கை என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகனாக நடித்து இருக்கும் யோகிபாபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வறுமையில் வாடுவது, கார் கிடைத்தவுடன் சந்தோஷத்தில் பூரிப்பது, கார் திருடு போன பிறகு வருந்துவது, போலீசுடன் நக்கலாக பேசுவது என கிடைக்கும் இடங்களில் எல்லாம் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நகைச்சுவை பேச்சால் ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார்.
யோகிபாபுவின் மனைவியாக நடித்திருக்கும் ரேச்சல் ரபேகா, இயல்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீராவின் நடிப்பு சிறப்பு.
இயக்குனர்
ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் மட்டும் வாழ்க்கை இல்லை. அதைத்தாண்டி நிறைய விஷயங்கள் இருக்கிறது என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் பாலாஜி. ஒரு சில இடங்களில் திரைக்கதை ரசிக்கும் படி இருந்தால், பல இடங்களில் யதார்த்தத்தை மீறியதாக இருக்கிறது. கதாபாத்திரங்களிடையே சரியாக வேலை வாங்கி இருக்கிறார்.
இசை
ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
சந்தீப் கே.விஜயின் ஒளிப்பதிவு சூப்பர்.
படத்தொகுப்பு
மதனின் படத்தொகுப்பு நேர்த்தி.
காஸ்டியூம்
நந்தினி நெடுமாறன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூமை டிசைன் செய்துள்ளார்.
புரொடக்ஷன்
திங் மியூசிக் தயாரிப்பில் ’லக்கி மேன்’ பரவாயில்லை.