search icon
என் மலர்tooltip icon
    < Back
    Maya Puthagam
    Maya Puthagam

    மாய புத்தகம்

    இயக்குனர்: ராம ஜெயபிரகாஷ்
    இசை:ரவி விஜயானந்த்
    வெளியீட்டு தேதி:2024-07-19
    Points:608

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை178164
    Point258350
    கரு

    முன் ஜென்மத்தில் நடந்த சாபத்தால் மோட்சம் அடையாமல் இருக்கும் நாயகியின் கதை.

    விமர்சனம்

    கதைக்களம் 

    நாயகன் அசோக், சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இவருக்கு ஒருநாள் இரவில் தூங்கும் போது, புத்தகம் ஒன்றையும் அதிலிருந்து பாம்பு வருவதையும் கனவில் காண்கிறார். மேலும் அந்த பாம்பு அவரை தூங்க விடாமல் செய்கிறது. இந்த கனவை ஒரு சாமியாரிடம் அசோக் சொல்ல, அவர் உடனே கனவில் பார்த்த புத்தகத்தை கொடுக்கிறார். மேலும் இதில் இருக்கும் கதையை திரைப்படமாக இயக்கவும் சொல்கிறார்.

    சாமியாரின் சீடரான தயாரிப்பாளர் இளவரசு, அசோக் இயக்கவிருக்கும் படத்தை தயாரிக்க முடிவு செய்கிறார். புத்தகத்தில் உள்ள கதைப்படி காந்தார மலையில் இருக்கும் ஆளில்லா பங்களாவிற்கு தன் குழுவினருடன் செல்கிறார் அசோக். அங்கு பல அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கிறது.

    இறுதியில் அந்த பங்களாவில் அமானுஷ்ய விஷயங்கள் நடக்க காரணம் என்ன? அந்த புத்தகத்தில் உள்ள மர்மம் என்ன? இயக்குனராக அசோக் படத்தை இயக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் அசோக், இயக்குனராக முயற்சி செய்வது, தனக்கு வரும் தடைகளை எதிர்ப்பது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக நடனம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

    நாயகியாக நடித்து இருக்கும் அபர்நதி, மகாராணி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் பளிச்சிடுகிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே வரும் ஶ்ரீகாந்தின் தோற்றமும், நடிப்பும் பெரியதாக கைகொடுக்க வில்லை.

    இயக்கம்

    முன் ஜென்ம கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராம ஜெயபிரகாஷ். முதல் பாதி பேய் படங்களுக்கு உண்டான, பாழடைந்த பங்களா, ரூம் கதவை திறப்பது, பயமுறுத்துவது என்று திரைக்கதை நகர்கிறது. இரண்டாம் பாதி வரலாறு கதை, முன் ஜென்மம், போர் என்று நகர்கிறது. அதிக கிராபிக்ஸ் காட்சிகள் வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டுமே கிராபிக்ஸ் காட்சிகள் ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது.

    இசை 

    ரவி விஜய் ஆனந்த் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதைக்கு ஏற்றார் போல் கொடுத்து இருக்கிறார்.

    ஒளிப்பதிவு 

    பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் செய்திருப்பதால் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு கவனம் பெறவில்லை.

    தயாரிப்பு 

    வினோத் ஜெயின் சார்பில் ஜாகுவார் ஸ்டூடியோஸ் நிறுவனம் மாய புத்தகம் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×