என் மலர்


மர்மர்
அமானுஷ்ய காட்டிற்குள் சிக்கிய 5 இளைஞர்களின் கதையாகும்
கதைக்களம்
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றை ஒட்டியுள்ள காட்டில் கண்ணி தெய்வங்களுக்கு வருடம் வருடம் செய்ய வேண்டிய பூஜையை செய்யவிடாமல், அங்கிருக்கும் சூனியக்காரியின் ஆவி தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அந்த காட்டுக்குள் சென்றவர்கள் திரும்பி வந்ததில்லை என்றும் கிராம மக்கள் சொல்கிறார்கள்.
இதை தெரிந்துக் கொண்ட நான்கு பேர் கொண்ட குழு, அதை ஆவணப்படம் எடுப்பதற்காக அந்த காட்டுக்குள் செல்ல நினைக்கிறார்கள். இவர்களுக்கு வழிகாட்ட கிராமத்து பெண் ஒருவரும் இணைந்து கொள்ள ஐந்து பேர் அந்த காட்டுக்குள் செல்கிறார்கள்.
இறுதியில் அந்த காட்டுக்குள் சென்ற ஐந்து பேரும் உயிருடன் திரும்பினார்களா? உண்மையில் சூனியக்காரி ஆவி இருக்கிறதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் என ஐந்து பேரை சுற்றியே படம் நகர்கிறது. இவர்களும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். காட்டுக்குள் பயப்படும் காட்சியில் பயமுறுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
ஒரு அமானுஷ்ய காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் ஐந்து இளைஞர்களின் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹேம்நாத் நாராயணன். வழக்கமான பேய் படங்கள் போல் இல்லாமல், இதில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். ஃபவுண்ட் ஃபூட்டேஜ்’ என்று சொல்லக்கூடிய நேரடியாக கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கொண்டு படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு. பார்ப்பவர்களுக்கு பயத்தை கொடுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக திரைக்கதையை அமைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஜேசன் வில்லியம்ஸ் தனது ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை உணரவைத்து இருக்கிறார். பல இடங்களில் உண்மை தன்மையை உறுதிப்படுத்த கேமராவை அதிகமாக ஷேக் செய்தது பார்வையாளர்களின் கவனத்தை சிதறடிக்கிறது.
இசை
படத்தில் இசை இல்லாததால் கேவ்ய்ன் பிரெடெரிக் ஒலி வடிவமைப்பால் நம்மை பயப்பட வைத்து இருக்கிறார்.
தயாரிப்பு
SPK Pictures & Stand Alone Pictures International நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது