என் மலர்tooltip icon
    < Back
    Paramporul
    Paramporul

    பரம்பொருள்

    இயக்குனர்: அரவிந்த் ராஜ்
    எடிட்டர்:நாகூரன் ராமச்சந்திரன்
    ஒளிப்பதிவாளர்:எஸ் பாண்டிகுமார்
    இசை:யுவன் ஷங்கர் ராஜா
    வெளியீட்டு தேதி:1 Sept 2023
    Points:1440

    ட்ரெண்ட்

    வாரம்1234
    தரவரிசை132155122140
    Point6216621525
    கரு

    குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் இளைஞன் மற்றும் போலீஸ் அதிகாரியின் நிலை என்னவாகிறது என்பது குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகன் அமிதாஸ் தனது தங்கையின் மருத்துவ செலவிற்காக திருடி பணம் சேர்க்கிறார். ஒரு நாள் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சரத்குமாரின் வீட்டிற்கு திருட சென்று அவரிடம் மாட்டிக் கொள்கிறார். அமிதாஸை விசாரிக்கும் போது, பழைய காலத்து சிலை ஒன்று இருப்பதாகவும், அதை கண்டு பிடித்து கைமாற்றி விட்டால் பல கோடி ரூபாய் போகும் என்றும் சரத்குமார் தெரிந்துக் கொள்கிறார்.

    அமிதாஸை வைத்தே அந்த சிலையை கண்டுபிடிக்கிறார் சரத்குமார். மேலும் அமிதாஸுக்கு பண ஆசை காண்பித்து பாட்னராக சேர்த்துக் கொள்கிறார். இருவரும் கூட்டு சேர்ந்து அந்த சிலையை ஒரு பெரிய தொகைக்கு பேரம் பேசுகிறார்கள். சிலையை கை மாற்றி விடும் நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு சண்டையில் உடைந்து போகிறது.

    இறுதியில் சரத்குமார் - அமிதாஸ் இருவரும் உடைந்த சிலையை வைத்து என்ன செய்தார்கள்? இருவருக்கும் பணம் கிடைத்ததா? தங்கையை அமிதாஸ் காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அமிதாஸ் அமுல் பேபியாக இருந்து தற்போது ஆக்ஷன் ஹீரோவாக மாறி இருக்கிறார். தங்கைக்காக வருந்துவது, பணம் சேர்த்தே ஆக வேண்டும் என்று முனைப்போடு செயல்படுவது, சேர்த்து வைத்த பணத்தை செலவு செய்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

    படத்திற்கு பெரிய பலம் சரத்குமாரின் நடிப்பு. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் போலீஸ் அதிகாரியாக இவர் நடித்திருப்பது, நிஜ வாழ்க்கையில் இருக்கும் சில போலீஸ் அதிகாரிகளை நியாபகப்படுத்துகிறது. போலீஸ் அதிகாரி தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கிளைமாக்சில் ஒரு பார்வையில் பல வார்த்தைகள் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் காஸ்மிரா பர்தேசி ஆங்காங்கே வந்து அழகான நடிப்பை கொடுத்து இருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார் பாலாஜி சக்திவேல். தங்கையாக வரும் ஸ்வாதிகா அண்ணன் மீது பாசம் காட்டுபவராக நடித்து கவர்ந்து இருக்கிறார். வின்சென்ட் அசோகன், கஜராஜா ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    சிலை கடத்தலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜ். இதில் காதல், ஆக்ஷன், தங்கை பாசம், அப்பா பாசம் என திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். இறுதியில் யாரும் எதிர்பார்த்திராத திருப்பம் ரசிக்க வைக்கிறது.

    இசை

    யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் பெரியதாக கவரவில்லை. பின்னணி இசையில் ஸ்கோர் செய்து இருக்கிறார். 

    ஒளிப்பதிவு

    பாண்டி குமாரின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    படத்தொகுப்பு

    நாகூரன் ராமசந்திரன் படத்தொகுப்பு சிறப்பு.

    காஸ்டியூம்

    இடத்திற்கு ஏற்றார் போன்ற காஸ்டியூம்களை வடிவமைத்துள்ளார் பூர்ணிமா ராமசாமி.

    புரொடக்‌ஷன்

    கவி கிரியேஷன் குறைந்த பொருட்செலவில் தயாரித்து படத்தை பெரிதாக காண்பித்துள்ளனர்.



    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×