என் மலர்
பார்க்
- 0
- 0
- 1
வாரம் | 1 | 2 |
---|---|---|
தரவரிசை | 254 | 246 |
Point | 132 | 136 |
காதல் ஜோடி ஒன்று பேயாக வந்து பழி வாங்கும் கதை
கதைக்களம்
திருவண்ணாமலையில் தாயுடன் வாழ்ந்து வரும் நாயகன் தமன் குமார், நண்பர் பிளாக் பாண்டியுடன் சேர்ந்து கொண்டு ஊரை சுற்றி வருகிறார். நாயகி ஸ்வேதா டோரத்தியை கோவிலில் பார்க்கும் தமன், அவர் மீது காதல் வயப்படுகிறார். பின்னர் அடிக்கடி சந்திப்பில் இருவரும் மோதிக் கொண்டு காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இருவரும் திருமணம் நிச்சியம் செய்த நிலையில் ஒரு பிரச்சனையின் போது அருகில் இருக்கும் பார்க் - க்கு செல்கிறார். அங்கு அமானுஷ்ய சக்தி இரண்டு, இவர்கள் இருவருக்கும் உள்ளே புகுந்து விடுகிறது. அதன் பிறகு இவர்களின் வாழ்க்கை மாறுகிறது.
இறுதியில் அமானுஷ்ய சக்தி கொண்ட ஆவிகளின் நோக்கம் என்ன? ஆவிகளிடமிருந்து தமன், ஸ்வேதா இருவரும் மீண்டு ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் தமன், துறுதுறு இளைஞனாக நடித்து இருக்கிறார். கதாநாயகியாக நடித்து இருக்கும் ஸ்வேதா டோரத்தி இளமை துள்ளல்லான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரண்டாம் பாதியில் இருவரும் பயமுறுத்த முயற்சி செய்து இருக்கிறார்கள். பிளாக் பாண்டியின் காமெடி ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
வழக்கமான பழிவாங்கும் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் முருகன். முதல் பாதி காதல், ரொமான்ஸ் என்று திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். இரண்டாம் பாதி ஆவி, ஆத்மா என்று பயமுறுத்த முயற்சி செய்து இருக்கிறார். தமன், ஸ்வேதா இடையேயான காதல் காட்சியை ரசிக்க வைத்து இருக்கிறார். ஆனால், காமெடியும், ஹாரரும் பெரியதாக எடுபடவில்லை. 'ஆவிகளுக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றி விட்டால் அவை நம்மை விட்டு வெளியேறிவிடும்’ என்ற கருத்தைச் சொல்லி இருக்கிறார்.
இசை
ஹமராவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு குறை சொல்லும் அளவிற்கு இல்லை.
தயாரிப்பு
அக்ஷயா மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.