என் மலர்


பேச்சி
அமானுஷ்யம் நிறைந்த காட்டுக்குள் மாட்டிக்கொண்ட நண்பர்களின் கதை
கதைக்களம்
காயத்ரி ஷங்கர், தேவ் ராம்நாத் ஜோடி தங்கள் நண்பர்களுடன் கொல்லிமலையில் உள்ள ஒரு இடத்திற்கு சாகச சுற்றுலா செல்கின்றனர். அவர்களுக்கு உதவ உள்ளூர் Forest guide பால சரவணன் உடன் காட்டுப்பகுதிக்கு செல்கிறார்.
அங்கு நண்பர்கள் குழு தடை செய்யப்பட்ட வனப் பகுதிக்கு செல்ல முற்படுகின்றனர். பால சரவணனின் எச்சரிக்கையும் மீறி இருவர் உள்ளே செல்கின்றனர். ஏற்கனவே அந்த தடை செய்யப்பட்ட பகுதிகளில் அமானுஷ்ய சம்பவங்கள் நடைப்பெற்று வருகிறது. அதை தெரிந்துக் கொள்ளாமல் இந்த நண்பர்கள் ஒரு உத்வேகத்தில் அதற்குள் நுழைகின்றனர். அதற்கு பின் பேச்சி என்ற அமானுஷ்ய ஆவி இவர்களை என்ன செய்தது? பேச்சியின் பின் உள்ள விஷயம் என்ன? இவர் அந்த காட்டு பகுதியில் இருந்து தப்பித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
பால சரவணன் அவருக்கு கொடுத்த கதாப்பாத்திரத்தை மிக அழகாக செய்துள்ளார். தேவ் ராம்நாத் மற்றும் நண்பர்கள் கொடுத்த வேலையை செய்யதுள்ளார்கள். பல திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய காயத்ரி சங்கர் இப்படத்தில் மிகவும் லைட்டாக நடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
இயக்கம்
காட்டில் மாட்டிக்கொண்ட இளைஞர்களும் அங்கு உள்ள அமானுஷ்யத்தை வைத்து மையமாக கதையை இயக்கியுள்ளார் ராமச்சந்திரன். படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே காட்டு பகுதிக்குள் சென்று விடுகின்றனர். ஆனால் முதல் பாதியில் அமைக்கப்பட்ட காட்சிகள் மறுபடி மறுபடி வருவது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் இரண்டாம் பாதி சூடு பிடித்து நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது. படத்தின் இடம் பெற்ற திகில் காட்சிகள் பாராட்டுக்குறியவை. பேச்சி கதாப்பாத்திரத்தை மிக அழகாக பயன்படுத்தியுள்ளார் இயக்குனர்.
ஒளிப்பதிவு
பார்த்திபனின் ஒளிப்பதிவு நம்மை காடு பகுதிக்கு அவர்களுள் ஒருவராக அழைத்து செல்கிறார்.
இசை
ராஜேஷ் முருகேசன் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.படத்தின் திகில் காட்சிகளில் மிக அழகாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.
தயாரிப்பு
வெயிலான் எண்டர்டெயின்மண்ட் மற்றும் வெர்சஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
Ok but no Thriii