என் மலர்


பேய் கொட்டு
திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்
கதைக்கரு
நாயகியான லாவண்யா ஒரு பத்திரிகை நிபுணராக வேலைப்பார்த்து வருகிறார். ஊட்டியில் ஒரு வேலை விஷயமாக சென்று வரும் வழியில் அவரது கார் பிரச்சனைக்கு உள்ளாகிறது. இதனால் அவர் ஊட்டியில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. இவருக்கு தெரியாமல் இவருடன் ஒரு குட்டி பட்டன் வைத்த கேமரா வருகிறது. அதன் பிறகு லாவண்யா தூங்கும் போதெல்லாம், அந்த கேமரா என்னுடையது என ஒரு பெய் கனவில் வந்து அவரை மிரட்டி கொட்டுகிறது.
மேலும் ஒரு பிரபலமான பாடலை பாடினால் அனைவரையும் அந்த பேய் கொட்டுகிறது. லாவண்யாவை சிலப்பேர் ஏற்கனவே சந்தித்து பழகியதுப் போல் வேறு ஒரு பெயரை வைத்து அழைக்கின்றனர்.
இந்த அமானுஷ்ய பேய் லாவண்யா வாழ்க்கையில் வந்து தொந்தரவு செய்கிறது. இந்த அமானுஷ்ய பேயின் பின்னணி என்ன? ஏன் அந்த பேய் அனைவரையும் கொட்டுகிறது? பேய்க்கும் லாவண்யாவிற்கு என்ன தொடர்பு? லாவண்யாவை ஏன் அனைவரும் வேறு ஒரு பெயரை வைத்து அழைக்கின்றனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகியாக இரு வேடங்களில் நடித்துள்ளார் லாவண்யா. எமோஷனல் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற காட்சிகளில் ஓரளவுக்கு நடிக்க முயற்சித்துள்ளார். மற்ற நடிகர்களான தீபா ஷங்கர், ஸ்ரீஜா ரவி மற்றும் ஷாந்தி ஆந்தராஜ் அவர்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் திரைத்துறையில் உள்ள 24 கலைகளையும் செய்ய லாவண்யா முயற்சி செய்ததற்கு பாராட்டுகள். ஆனால் அந்த 24 கலைகளையும் ஒழுங்காக செய்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். கதை மற்றும் காட்சி அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். கலைத்துறையில் ஏராளமானோர் இருந்தும் தானே அனைத்தையும் செய்ய என்ன அவசியம் என்ற கேள்வி எழுகிறது.
இசை
லாவண்யாவின் இசை கதைக்கு பொருந்தவே இல்லை. சவுன் எஃபக்டுகளில் கவனம் செலுத்திருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
லாவண்யா மற்றும் ஜான் விகடரின் ஒளிப்பதிவு படு மோசம். குவாலிடி இல்லாதது போன்ற உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது.
தயாரிப்பு
OM SAI PRODUCTIONS and ZAARA MUSIC LABEL நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது.
நல்ல முயற்சி தான் தொடரட்டும்.நட்பே