என் மலர்


பெருசு
தந்தை இறப்பை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்.
கதைக்களம்
நாயகன் வைபவ் மற்றும் சுனில் அவர்களின் தந்தை, வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருக்கும் போது உயிரிழந்து விடுகிறார். இவர் இறப்பில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை ஊரில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்தால் மானம் மரியாதை போய்விடும் என்று குடும்பத்தினர் பயப்படுகின்றனர்.
இறுதியில் வைபவ் மற்றும் சுனில் இருவரும் தனது தந்தையை எப்படி அடக்கம் செய்தார்கள்? தந்தை இறந்த பிறகு ஏற்பட்ட பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் வைபவ், சுனில் இருவரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். இவர்களின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்து இருக்கிறது. தந்தை இறப்பிற்கு வரும் ஊர்காரர்களை சுனில் சமாளிக்கும் விதம் அருமை. படம் முழுவதும் குடித்துக் கொண்டு வரும் வைபவ், கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார்.
வைபவ்வை பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார் நாயகி நிஹாரிகா. மற்றொரு நாயகியாக வரும் சாந்தினி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். தாயாக வரும் தனம், சித்தியாக வரும் தீபா, நண்பராக வரும் பால சரவணன், சாமியாராக வரும் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இயக்கம்
வயதான முதியவர் இறப்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இளங்கோ ராம். ஆரம்பம் முதல் இறுதி வரை கலகலப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். அதிக ஆபாசம் இல்லாத அளவிற்கு திரைக்கதையை கொண்டு சென்றிருக்கிறார்.
இசை
அருண் ராஜ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை கதைக்கு ஏற்றார் போல் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
சத்யா திலகம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் சிறப்பு.
தயாரிப்பு
ஸ்டோன் பென்ச் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.