search icon
என் மலர்tooltip icon
    < Back
    Rail
    Rail

    ரயில்

    இயக்குனர்: பாஸ்கர் சக்தி
    எடிட்டர்:நாகூரன் ராமச்சந்திரன்
    ஒளிப்பதிவாளர்:தேனீ ஈஸ்வர்
    இசை:S. J. ஜனனி
    வெளியீட்டு தேதி:2024-06-21
    Points:838

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை146147
    Point386452
    கரு

    தொழிலுக்காக புலம் பெயர்ந்த வடமாநிலத்தவரும் மனிதர்கள் தான் என கூறும் படம்

    விமர்சனம்

    கதைக்களம்

    தேனி மாவட்டத்தில் ஒரு அழகான கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் குங்குமராஜ். கதாநாயகனுக்கு தொழில் இருந்தும் அதை சரிவர கவனித்துக் கொள்வதில்லை. எதுக்கெடுத்தாலும் ஒரு சலிப்பு மனப்பான்மையிலேயே இருக்கிறார். பெரும் சொத்து இருந்தும் அதை குடித்தே அளித்தவர் குங்குமராஜ். அதனால் தற்பொழுது வாடகை வீட்டில் தங்கக் கூடிய சூழ்நிலை. தினமும் எழுவது குடிப்பது, வேலைக்கு போகும் வருபவரை கேலிக் கிண்டல் செய்வதே இவரது தினசரி வேலை.

    கதாநாயகன் குங்குமராஜ்ஜின் எதிர்வீட்டில் வசிக்கிறார் வடமாநிலத் தொழிலாளியான சுனில். சுனிலுக்கும் கதாநாயகனின் மனைவிக்கும் அக்கா - தம்பி என்கிற அளவில் ஆத்மார்த்தமான உறவு இருக்கிறது, ஆனால் கதாநாயகனுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. சுனிலின் பேச்சும், செயலும், தன் ஊருக்கு வந்து வேலைப் பார்ப்பதும் குங்குமராஜுக்கு பிடிக்காத நிலை இருக்கிறது. ஒரு நாள் இது பெரும் பிரச்சனையாகி இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது. அடுத்தநாள் சுனிலுக்கு பெரும் அசாம்பாவிதம் நடக்கிறது. இதனால் குங்குமராஜ் பெரும் பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். சுனிலுக்கு என்ன நடந்தது? குங்குமராஜ் அவரது இந்த வன்ம மனநிலையில் இருந்து மாறினாரா? ஆணவத்துடனே இருக்கும் கதாநாயகன் திருந்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்திருக்கும் குங்குமராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகன் கூடவே பயணிக்கும் எழுத்தாளர் ரமேஷ் வைத்யா தேனிக்கே உரியதான தோரனையுடன் வசனங்கள் பேசி மனதில் பதிந்துள்ளார். வடமாநில தொழிலாளியாக நடித்திருக்கும் பர்வேஸ் மெஹ்ரு மற்றும் வைரமாலா கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    உண்மையில் மக்கள் பிழைப்பை தேடி ஒவ்வொரு நாட்டில் இருந்து அங்கும் இங்கும் அழைந்துக் கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு பிழைப்பை தேடி நம் தமிழ் நாட்டிற்கு வரும் வடமாநிலத்தவர்களை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் பாஸ்கர் சக்தி. படத்தில் இடம் பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள் கைத்தட்டல் பெருகிறது. படத்தின் இரண்டாம் பாதியில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். திரைக்கதை மெதுவாக செல்வது படத்திற்கு பலவீனம். படத்தின் கடைசியில் புலம் பெயர்ந்த தொழிலாளிகளும் மனிதர்கள்தான், அவர்களுக்கு குடும்பம், சூழல் ஆசை என எல்லாம் இருக்கிறது. அவர்களின் நிலைமை நம்மை விட மோசம் என்ற அளவிற்கு யோசிக்க வைப்பது பாராட்டுக்குறியது.

    ஒளிப்பதிவு

    கதையில் மற்றொரு நாயகனாக வலம் வருகிறார் தேனி ஈஸ்வர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளே நடப்பதுப் போல் இருந்தாலும் அதை நேர்த்தியாக படம் பிடித்து காண்பித்து இருக்கிறார் தேனி ஈஸ்வர்.

    இசை

    எஸ்.ஜே ஜனனியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கிராம பின்னணிக்கு ஏற்ப சில இசைக்கோர்வைகள் நன்றாக இருந்தது.

    தயாரிப்பு

    வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் நிறுவனம் ரயில் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×