என் மலர்


ராஜபீமா
யானை தந்தத்தை விற்கும் கும்பலை பற்றிய கதை
கதைக்களம்
கதாநாயகன் ஆரவ் சிறு வயதில் இருந்தே யானை எனறால் மிகவும் பிடிக்கும். இவரது தாயார் காலமானப்பின் தந்தையான நாசர் ஆரவை வளர்த்து வருகிறார். நாசர் ஊரில் திரையரங்கை ஒன்றை நடத்தி வருகிறார். தன் தாய் இறந்தபின் ஆரவ் மிகவும் டிப்ரஷன் ஆகிறார். இவரை அந்த மன அழுத்தத்த்தில் இருந்து வெளிக்கொண்டு வர நாசர் முயற்சிக்கிறார். அப்பொழுது ஊரில் உள்ள ஒரு யானை மூலம் ஆரவின் மனழுத்தம் குறைகிறது. அந்த யானைக்கு பீமா என பெயர் சூட்டி ஆரவ் வளர்த்து வருகிறார். ஆரவ் அந்த யானையை தன்னுடைய தாய்ப் போல பார்த்து வருகிறார். நாட்கள் கடக்கின்றன ஆரவ் அவர்கள் ஊரில் இருக்கும் கதாநாயகியான அஷிமா நர்வலை காதலிக்கிறார். இவர்கள் இருக்கும் ஊரில் யானை தந்தம் மற்றும் மான் கொம்புகளை திருடி விற்கும் கும்பல் இருக்கிறது. இதனை அறிந்துக் கொண்ட ஆரவ் அந்த கும்பலை வனத்துறையிடம் மாட்டிவிடுகிறார். இதனால் கோபம் கொண்ட அவர்கள் ஆரவ் வளர்த்து வரும் பீமா யானையை வனத்துறை உதவியுடன் கடத்துகின்றனர். இதனை அறிந்துக்கொண்ட ஆரவ் யானையை தேடும் முயற்சியில் ஈடுப்படுகிறார். இதற்கு அடுத்து என்ன நடந்தது? யானையை கண்டுப்பிடித்தாரா இல்லையா? கடத்திய யானைகளை அவர்கள் என்ன செய்தார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
ஆரவ் கம்பீரமான இளைஞனாக நடித்துள்ளார். யானை பிரிந்துப்போன சோக காட்சிகளில் எமோஷனலாக நடித்து ஸ்கோர் செய்துள்ளார். நாசர் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் அவர்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அஷிமா நர்வல் அளவான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஓவியா ஒரு பாடலிற்கு நடனம் ஆடினாலும் மக்கள் மனதில் பதிந்து விடுகிறார். யாஷிகா ஆனந்த் கொடுத்த கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.
இயக்கம்
விலங்குகளை அழித்து லாபம் பார்க்கும் மனித இனத்தை மையமாக வைத்து சில சமூக கருத்துகளுடன் சேர்ந்து ராஜபீமா படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் நரேஷ் சம்பத். முதல் பாதி காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருந்தால் திரைப்படத்தை கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
இசை
சைமன் கே கிங் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
ஒளிப்பதிவு
சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
தயாரிப்பு
சுரபி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது