என் மலர்


ராபர்
பணத்தேவைக்காக செயின் ஸ்னாசிங் செய்யும் இளைஞனின் கதை
கதைக்களம்
சென்னையில் வேலைப் பார்த்து வருகிறார் கதாநாயகனான மெட்ரொ சத்யா. கிராமத்தில் இருந்து வந்த இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் ஆசைப்பட்ட பெண்களை கவரவேண்டும் என்றால தன்னிடம் அதிகமான பணம் இருந்தால் மட்டுமே செய்ய முடியும் என்பதற்காக நகை திருட்டு தொழில் ஈடுப்படுகிறார்.
தனியாக செல்லும் நபரிடம், முகமூடி அணிந்து நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வருகிறார் சத்யா.
இந்த திருட்டு பழக்கத்தை வழக்கமாக வைத்துக் கொண்டு. திருடிய நகைகளை பெரியவர் ஒருவரிடம் வழக்கமாக விற்று வருகிறார் சத்யா ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பெரியவர் இறந்துவிடுவதால், அடுத்ததாக டேனியல் போப்பிடம் நகைகளை விற்க தொடங்குகிறார். ஆனால் இவர்கள் யாரிடமும் சத்யா முகத்தை வெளிக்காட்டாமல் அனைத்தையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், காலப்போக்கில் டேனியல் போப் டீமோடு பகைத்துக் கொள்கிறார் சத்யா. அதே சமயம், சத்யா இளம்பெண் ஒருவரிடம் நகை திருடிய போது, அப்பெண் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார்.
ஒருபக்கம், இறந்த பெண்ணின் அப்பாவான ஜெயபிரகாஷ் திருடனான சத்யாவை தேட, மற்றொரு பக்கம் டேனியல் போப் டீம் சத்யாவை தேட இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நடிகர்கள்
கதாநாயகனான சத்யா அவரது கதாப்பாத்திரத்தை மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். நகையை திருடும் போதும், மாட்டிக் கொண்டு ஓடும் காட்சியிலும் மற்றும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். தாயாக நடித்து இருக்கு தீபா சங்கர் அவருடைய பாணியில் மிகவும் உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
டேனியல் போப் மற்ற படங்களில் இல்லாத வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயபிரகாஷ் மற்றும் பாண்டியன் இருவரும் தங்களது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
இயக்கம்
தற்பொழுது உள்ள இளம் சமூதாயத்தினர் பணம், பெண், சொகுசு வாழ்க்கையிற்காக எந்த எல்லை வரைக்கும் செல்கிறார்கள் என்பதை உணர்த்த முயற்சித்துள்ளார் இயக்குனர் எஸ்.எம். பாண்டி. ஒரு நகை திருட்டு எப்படி நடக்கிறது அதில் உள்ள பின்புலம் என அனைத்தையும் காட்சி படுத்தியது சிறப்பு.
இசை
ஜோகனின் இசையில் பின்னணி இசை படத்தினை வேறு ஒரு தளத்திற்கு தூக்கி வைத்துவிட்டது என்று கூறலாம். அதிலும், படத்தின் மெயின் BGM படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவு
படத்தின் ஒளிப்பதிவாளரான உதயகுமார், காட்சிகளை நன்றாகவே காட்சிப்படுத்தியதில் கைகொடுத்திருக்கிறார். நகைகளை திருடும் காட்சிகளிலெல்லாம் ஒளிப்பதிவை நன்றாகவே கையாண்டிருக்கிறார் உதயகுமார்.
தயாரிப்பு
Impress Films மற்றும் Metro Productions நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.