என் மலர்tooltip icon
    < Back
    Saamaniyan
    Saamaniyan

    சாமானியன்

    இயக்குனர்: ஆர்.ராஹேஷ்
    எடிட்டர்:ராம் கோபி
    இசை:இளையராஜா
    வெளியீட்டு தேதி:23 May 2024
    Points:1661

    ட்ரெண்ட்

    வாரம்1234567
    தரவரிசை15113814695585633
    Point5308567568922218
    கரு

    சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை பார்க்கும் சாமானியனுக்கு கோபம் வந்தால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை பற்றிய கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    மதுரையில் இருந்து பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக கதாநாயகனான ராமராஜன் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் சென்னை வருகின்றனர். சென்னையில் ராதா ரவியின் வீட்டில் தங்கியுள்ளார். ராமராஜன் சென்னையில் உள்ள வங்கிக்கு ஒரு வேலையாக செல்கிறார். அச்சமையத்தில் நீண்ட நாட்களாக அந்த வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டு இருக்கிறது ஒரு கும்பல். உள்ளே சென்ற ராமராஜன் திடீரென்று டைம் பாம், துப்பாக்கி எல்லாம் எடுத்து வங்கியின் மேனேஜரை மிரட்டுகிறார்.

    வங்கியை அவரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். இச்செய்தி காவல்துறை மற்றும் செய்தியாளர்களுக்கு தெரிய வருகிறது. மக்களையும் வங்கியையும் மீட்க ராமராஜன் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை வைக்கிறார். எதனால் ராமராஜன் இப்படி செய்தார்? காரணம் என்ன? ராமராஜன் வைத்த கோரிக்கை என்ன?அதை அரசாங்கம் நிறைவேற்ற்றியதா என்பதே மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாநாயகனாக நடித்து இருக்கும் ராமராஜன் ஆக்‌ஷன் மற்றும் செண்டிமண்ட் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். எம்.எஸ் பாஸ்கர் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ராதா ரவி, கெ. எஸ் ரவிகுமார், வினோதி மற்றும் நக்‌ஷா சரண் அவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    ஒரு சாமானியனுக்கு கோவம் வந்தால் என்ன செய்ய முடியும் என்பதை மையமாக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராகேஷ். லோன் கேட்டு வருபவர்களை எப்படி எல்லாம் நடத்துகிறார்கள் என்பதை காட்சி படுத்தியுள்ளார். முதல் பாதியில் உள்ள சுவாரசியம் இரண்டாம் பாதியில் இல்லை, திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். லாஜிக் மிஸ்டேக்குகள் படம் முழுவதும் காணப்படுகின்றன.

    இசை

    இப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஆனால் இவர் இசையமைத்த பாடலை போல் எதுவும் தோன்றவில்லை . பின்னணி இசை படத்திற்கு பொருந்தவில்லை.

    ஒளிப்பதிவு

    அருள் செல்வன் கொடுத்த வேலை சரியாக செய்துள்ளார்.

    தயாரிப்பு

    எட்ஸ்ட்ரா எண்டர்டெயின்மண்ட் சார்பாக வி.மதியழகன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×