search icon
என் மலர்tooltip icon
    < Back
    Salaar
    Salaar

    சலார்

    இயக்குனர்: பிரசாந்த் நீல்
    எடிட்டர்:உஜ்வல் குல்கர்னி
    ஒளிப்பதிவாளர்:புவன் கவுடா
    இசை:ரவி பஸ்ரூர்
    வெளியீட்டு தேதி:2023-12-22
    Points:15725

    ட்ரெண்ட்

    வாரம்123456
    தரவரிசை162015175842
    Point39156269413813383827
    கரு

    ஒரு பெண்ணை காப்பாற்ற நடக்கும் பிரச்சனை குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது தந்தையை 7 வருடமாக ஒரு கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். அப்போது ஸ்ரேயா ரெட்டிக்காக ஒரு கும்பல் ஸ்ருதிஹாசனை கடத்த செல்கிறார்கள்.

    இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபிக்கு போன் செய்து மகள் இந்தியா வந்துவிட்டதாகவும் நீங்கள் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறுகிறார். இதைத்தொடர்ந்து ஸ்ருதிஹாசனை காப்பாற்ற பிரபாஸ் களமிறங்குகிறார்.

    இறுதியில் ஸ்ருதிஹாசனை ஸ்ரேயா கடத்த என்ன காரணம்? மைம் கோபிக்கு ஸ்ருதிஹாசனின் தந்தை என்ன சத்தியம் செய்து கொடுத்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார் நடிகர் பிரபாஸ். நண்பனுக்காக உருகும் காட்சிகளில் நம்மையும் கண் கலங்க வைத்துள்ளார்.

    பிரபாஸின் நண்பனாகவும், துரோகியாகவும் நடிப்பில் அசத்தியிருக்கிறார் பிரித்விராஜ். முதல் பாதியில் சாந்தமாகவும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகளில் வெறித்தனமாகவும் நடித்து பாராட்டை பெறுகிறார். ஸ்ருதிஹாசன் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

    இயக்கம்

    முழுக்க முழுக்க அதிரடி ஆக்‌ஷன் பேக்காக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல். சில காட்சிகளை தன்னுடைய திரைக்கதையின் மூலம் புல்லரிக்கும் படி அமைத்துள்ளார். படத்தின் இரண்டாம் பாதி நம் புருவங்களை உயர்த்தும்படியாக அமைந்துள்ளது. இரண்டாம் பாகத்திற்கு ஏற்றபடி முதல் பாகத்தை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இயக்கியுள்ளார். ஒரு சில இடங்களில் கேஜிஎப் படத்தின் சாயல் இருப்பது வருத்தம்.

    இசை

    ரவி பன்சூரின் இசை நம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

    ஒளிப்பதிவு

    புவன் கவுடாவின் கேமரா மிரட்டி இருக்கிறது.

    படத்தொகுப்பு

    உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு ரசிக்க வைத்துள்ளது.

    காஸ்டியூம்

    தோட்டா விஜய் பாஸ்கர் காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.

    புரொடக்‌ஷன்

    ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் ’சலார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    2023-12-31 04:39:46.0
    Balaselvi Murugan

    Waste

    ×