என் மலர்


சரக்கு
மதுவினால் ஏற்படும் பிரச்சனை குறித்த கதை.
கதைக்களம்
வழக்கறிஞரான மன்சூர் அலிகான் அவரைத் தேடி வழக்குகள் வராததால் மதுவிற்கு அடிமை ஆகிறார். இது மட்டும் இன்றி குடிகாரர்கள் சங்கம் தொடங்கி தரமான மதுபானங்கள் விற்க வேண்டும், ஏடிஎம் போல் மது பாட்டில்கள் மையம் திறக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு குடிமக்களின் ஆதரவு பெருகுகிறது. இந்தப் பிரச்சனை அரசுக்கு தலைவலியாக மாறுகிறது. இதனால் மன்சூர் அலிகான் மதுவிலக்கு துறை அமைச்சர் நாஞ்சில் சம்பத்தின் கோபத்திற்கு ஆளாகுகிறார். இந்த கோபத்தின் வெளிப்பாடாக கொலை பழி சுமத்தப்பட்டு சிறைக்கு தள்ளப்படுகிறார் மன்சூர் அலிகான்.
இறுதியில் மன்சூர் அலிகான் சிறையில் இருந்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
மதுவுக்கு அடிமையாகி மனைவியை கொடுமைப்படுத்தும் காட்சிகளிலும் மது பிரியர்கள் சங்கம் தொடங்கி அரசுக்கு நெருக்கடி கொடுப்பதிலும் வழக்கமான தெனாவட்டு கலந்து நடித்து ரசிக்க வைத்துள்ளார் மன்சூர் அலிகான். மனைவி கைதானதும் மனம் திருந்தி பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என போராடுவது படத்தின் கதைக்கு பலம் சேர்த்துள்ளது.
கணவனுக்காக போலீசாரின் சித்திரவதை அனுபவிக்கும் காட்சிகளிலும் குடிபோதையினால் கணவனிடம் கொடுமைப்படும் காட்சிகளிலும் வலினாவின் நடிப்பு பேசப்படும் வகையில் அமைந்துள்ளது. வழக்கறிஞராக பாக்கியராஜ், நீதிபதிகளாக லியாகத் அலிகான், கே.எஸ் ரவிக்குமார், பழ கருப்பையா ஆகியோர் கவனம் பெறுகின்றனர். மன்சூர் அலிகான்னோடு சிறையில் இருப்பதுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி செல்கிறார் யோகி பாபு.
இயக்கம்
மதுவினால் குடும்ப வாழ்க்கை மற்றும் ஏழை குடும்பங்கள் எவ்வளவு பாதிப்புக்குள்ளாகின்றன என்பதை சமூகத்திற்கு நல்ல பாடமாக இயக்கியுள்ளார் ஜெயக்குமார். மதுவை போல் சில இடங்களில், காட்சிகளின் தடுமாற்றத்தை தவிர்த்து இருக்கலாம்.
இசை
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் ஓகே.
ஒளிப்பதிவு
அருள் வின்சென்ட் மற்றும் மகேஷ் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
படத்தொகுப்பு
எஸ். தேவராஜ் படத்தொகுப்பு சிறப்பு.
காஸ்டியூம்
கதிரவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்.
புரொடக்ஷன்
ராஜ் கெனடி பிலிம்ஸ் நிறுவனம் ‘சரக்கு’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.