என் மலர்


செம்பியன் மாதேவி
கதைக்களம்
வசதியுள்ள குடும்பத்தின் வாரிசாக வளர்ந்து வருகிறார் கதாநாயகனான லோக பத்மநாபன். இவரின் அப்பா சொந்தமாக கோழிப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். அங்கு வேலைப்பார்ப்பவரின் மகளான ரெஜினாவை காதலிக்கிறார் பத்மநாபன். இவர்களது காதல் அடுத்தக் கட்டத்திற்கு செல்கிறது இதன் விளைவால் ரெஜினா கர்ப்பம் ஆகிறாள். இதை பதமநாபனிடம் சென்று விஷயத்தை கூறுகிறாள். ஆனால் பத்மநாபன் அவரை திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் மனம் உடைந்த ரெஜினா தான் கர்ப்பமாக இருப்பதை ஊர் முழுக்க சொல்வேன் என கூறுகிறார். கீழ் சாதி பெண்ணை திருமணம் செய்ய பத்மநாபனின் குடும்பம் ஒத்துகுமா? பத்மநாபன் திருமணம் வேண்டாம் சொல்வதற்கு காரணம் என்ன? இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனாக நடித்து இருக்கும் லோக பத்மநாபன் சுமாரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரெஜினா அவரது கதாப்பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் முடிந்த அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற நடிகர்கள் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
இயக்கம்
தமிழ் சினிமாவில் கால காலமாக சொல்லிக் கொண்டு இருக்கும் பண்ணையார் குடும்பத்தின் மகன் தனக்கு கீழ் உள்ள நாயகியை காதலிக்கிறான். இதே கதையைதான் மீண்டும் லோக பத்மநாபன் எடுத்துள்ளார். திரைக்கதை மற்றும் காட்சிகள் எளிதில் யூகிக்க முடியும்படி இருந்தது வருத்தம். திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
ஒளிப்பதிவு
கே. ராஜசேகரின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.
இசை
லோக பத்மநாபனின் இசை கேட்கும் ரகம்.
தயாரிப்பு
8 ஸ்டூடியோஸ் பிலிம் ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.