search icon
என் மலர்tooltip icon
    < Back
    Sila Nodigalil
    Sila Nodigalil

    சில நொடிகளில்

    இயக்குனர்: வினய் பரத்வாஜ்
    எடிட்டர்:ஷைஜல் பிவி
    ஒளிப்பதிவாளர்:அபிமன்யூ சதானந்தன்
    இசை:தர்ஷணா கேடி
    வெளியீட்டு தேதி:2023-11-24
    Points:210

    ட்ரெண்ட்

    வாரம்1
    தரவரிசை190
    Point210
    கரு

    இறந்த காதலியின் பிணத்தை மறைக்க போராடும் காதலன் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    டாக்டரான நாயகன் ரிச்சர்ட், கனடாவில் தனது மனைவி கீதாவுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு மாடல் அழகியான யாஷிகாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்படுகிறது. மனைவி கீதா வீட்டில் இல்லாத நேரத்தில் ரிச்சர்ட் மற்றும் யாஷிகா இருவரும் போதைப்பொருள் உட்கொண்டு உல்லாசமாக இருக்கிறார்கள்.

    இந்த நேரத்தில் கீதா தன் நண்பர்களுடன் வீட்டுக்கு வர, என்ன செய்வது என்று தெரியாமல் யாஷிகாவை வீட்டை விட்டு பின் வாசல் வழியாக வெளியே செல்ல சொல்கிறார். ஆனால், எதிர்பாராதவிதமாக யாஷிகா உயிரிழக்கிறார். தன் மனைவி கீதாவுக்கு தெரியாமல் யாஷிகாவை ஒரு பெட்டிக்குள் வைத்து புதைத்து விடுகிறார்.

    அதன்பின் வீட்டிற்கு செல்லும் ரிச்சர்ட்-க்கு யாஷிகாவின் உருவம் பயமுறுத்துகிறது. மனைவியிடம் சரியாக பேசாமல் வேலையிலும் அதிக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார் ரிச்சர்ட். இந்நிலையில் யாஷிகாவின் உறவு பெண் ரிப்போர்ட்டர் ஒருவர், ரிச்சர்ட்டை மிரட்டுகிறார்.

    இறுதியில் யாஷிகா எப்படி இறந்தார்? தன் மனைவி கீதாவிடம் ரிச்சர்ட் மாட்டிக்கொண்டாரா? ரிப்போர்ட்டர் பெண் ரிச்சர்ட்டை மிரட்ட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரிச்சர்ட், ஸ்டைலிஷ் லுக்கில் பார்க்க நன்றாகவே இருக்கிறார். ரொமான்ஸ், பயம், கவலை என நடிப்பில் பளிச்சிடுகிறார். கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் யாஷிகா. ரிச்சர்ட்டுடன் ரொமான்ஸ் காட்சிகளில் அதிக ஈடுபாட்டுடன் நடித்து இருக்கிறார். ரிச்சர்ட்டின் மனைவியாக வரும் புன்னகை பூ கீதா, வித்தியாசமான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

    இயக்கம்

    கள்ளக்காதல், கொலை, அதை சுற்றி நடக்கும் மர்மம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வினய் பரத்வாஜ். மூன்று பேரை சுற்றியே திரைக்கதை நகர்வதால் அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது.  ஸ்டைலிஷாக ரிச்சர்ட் மற்றும் கீதா பேசுகிறார்கள். அது பெரிதாக ஒர்க்கவுட் ஆகவில்லை.

    இசை

    தர்ஷணா கதைக்கு தேவையான இசையை கொடுத்துள்ளார்.

    ஒளிப்பதிவு

    அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவில் கனடா அழகை கச்சிதமாக படம் பிடித்து இருக்கிறது.

    படத்தொகுப்பு

    சைஜல் பிவி படத்தொகுப்பு ரசிக்க வைக்கிறது.

    புரொடக்‌ஷன்

    மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் ‘சில நொடிகளில்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×