என் மலர்


சைலண்ட்
திருநங்கைகளின் வாழ்வியல் சோகங்களைப் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது சைலண்ட்
கதைக்களம்
ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இந்த கொலைகளுக்கு பின்னணியில் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறார் போலீஸ் ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என்பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா? அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன ?உண்மையில் புவனேஷ் தான் கொலை செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டி திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து என எல்லோரும் கதாப்பாத்திரத்திற்கான உழைப்பத் தந்துள்ளார்கள்.
இயக்கம்
இயக்குநர் கணேஷா பாண்டி மிக அழுத்தமான களத்தை தேர்ந்தெடுத்து படத்தை இயக்கியுள்ளார். திரைப்படத்தின் முதல் பாதியில் கூடுதல் கவனம் செலுத்திருக்கவேண்டும்.நடிப்பில் கவனம் செலுத்திய கணேஷ் பாண்டி கொஞ்சம் இயக்கத்திலும் கவனம் செலுத்திருக்கவேண்டும்.
ஒளிப்பதிவு
சேயோன் முரளியின் ஒளிப்பதிவு படத்திற்கு ப்ளசாக அமைந்துள்ளது.
இசை
சமய முரளியின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
தயாரிப்பு
S.ராம் பிரகாஷ் சைலண்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.