என் மலர்


சிறகன்
ஒரு கொலையை விசாரிக்க சென்ற இன்ஸ்பக்டர் அதற்கு பின்னணியில் உள்ள மர்மங்களையும் காரணங்களையும் கண்டுப்பிடிப்பதே படத்தின் கதை.
கதைக்களம்
இன்ஸ்பக்டர் வினோத்தின் தங்கை தற்கொலை செய்துக்கொள்கிறார். தன் தங்கை தற்கொலைக்கு காரணம் என்னவென்று தெரிந்துக் கொள்ள முயற்சிக்கிறார் ஆனால் அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அதனால் மன அழுத்தத்தில் இருக்கிறார். அப்பொழுது ஒரு கொலை நடக்கிறது அதை விசாரணை செய்யுமாறு இன்ஸ்பக்டர் வினோதுக்கு அந்த கேஸ் ஒப்படைக்கப்படுகிறது.
அதை விசாரித்துக் கொண்டு இரவு வீடு திரும்புகையில் கஜராஜா அவரின் வண்டியை மறித்து யாரோ தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என கூறுகிறார். யார் என்று அங்கு சென்று பார்த்தால் அங்கு எம்.எல்.ஏ ஜீவா ரவி இறந்து கிடக்கிறார்.
இவ்வாறு அடுத்தடுத்து நடந்த கொலைகளுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள்?, ஏன் கொலை செய்கிறார்கள்? இந்த கொலைகளுக்கும் தன் தங்கை மரணத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? இன்ஸ்பக்டர் வினோத் இதை எப்படி கண்டுப்பிடித்தார் என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
கதையின் நாயகர்களாக வக்கீல் கஜராஜ், இன்ஸ்பக்டர் வினோத் நடித்து இருக்கிறார்கள். கஜராஜ் எப்பொழுதும் போல அவரது பாணியில் இயல்பாக நடித்துள்ளார். இன்ஸ்பக்டராக நடித்திருக்கும் வினோத் தோற்றத்திலும், உடல் பாவனைகளிலும் கதாப்பாத்திரத்தில் ஒன்றி சிறப்பாக நடித்து இருக்கிறார்.
பள்ளி ஆசிரியையாக பௌசி ஹிதயா மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பாலாஜி, ஜீவா ரவி மர்றும் அனந்த் நாக் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
பணமும், வசதியும், அதிகார பலமுமே சிறு வயதிலேயே சிலரை குற்றவாளியாக்குகிறது என்பதை கதையில் கூறயிருக்கிறார். ஒரு கொலையை கதாப்பாத்திரத்தின் ஒவ்வொறு கோணத்திலும் கதையை கூறியது படத்தின் பலம். படத்தின் முதல் பாதி ஆங்காங்கே சலிப்பு தட்டினாலும் இரண்டாம் பாதி நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. திரைக்கதை யுக்தியில் கவர வைத்த இயக்குனர். படத்தின் உருவாக்கத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.
ஒளிப்பதிவு
சேட்டை சிக்கந்தர் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பல காட்சிகள் நமக்கு ஒரு குறும்படத்தை பார்க்கும் உணர்வையே கொடுக்கிறது.
இசை
ராம் கணேஷின் பின்னணி இசை கேட்கும் ரகம்.
தயாரிப்பு
மேட் பிலிம்ஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர்.