என் மலர்tooltip icon
    < Back
    Teenz
    Teenz

    டீன்ஸ்

    இயக்குனர்: பார்த்திபன்
    எடிட்டர்:ஆர். சுதர்சன்
    ஒளிப்பதிவாளர்:கவாமிக் ஆரி
    இசை:டி. இமான்
    வெளியீட்டு தேதி:12 July 2024
    Points:5341

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை1086148
    Point89427911656
    கரு

    டீனேஜ் சிறுவர்கள் காட்டில் மாட்டிக் கொள்ளும் கதை

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 சிறுவர்கள் நண்பர்களாக பழகிக்கொண்டு ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களை சிறுவர்கள் என்று பெற்றோர்கள், உறவினர்கள் அழைப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லை. வெளிநாடுகளைப் போல் நம்ம நாட்டிலும் சிறுவர்களுக்கு பெற்றோர்கள் அதிகமான சுதந்திரம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறார்கள். தாங்கள் சிறுவர்கள் இல்லை, டீன்யேஜ் வயதில் இருப்பவர்கள் என்று நிரூபிக்க நினைக்கிறார்கள்.

    இந்நிலையில் ஒரு சிறுமி தன் ஊரில் பேய் இருப்பதாகவும், அமானுஷ்ய நிகழ்வுகளும் நடப்பதாக கூற, இந்த 12 சிறுவர்களும் பள்ளி ஆசிரியை ஏமாற்றி, அந்த ஊருக்கு புறப்படுகிறார்கள். இவர்களுடன் மற்றொரு சிறுவனும் இணைந்துக் கொள்ள மொத்தம் 13 சிறுவர்களாக அந்த ஊருக்கு செல்கின்றனர். போகும் வழியில் போக்குவரத்து பிரச்சனை ஏற்பட, காட்டுப் பாதையில் பயணிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. காட்டு வழியில் செல்லும் போது, ஒவ்வொரு சிறுவர்களாக மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள்.

    இறுதியில் மாணவர்கள் காணாமல் போக காரணம் என்ன? மாணவர்கள் ஒன்று சேர்ந்து வீடு சென்றார்களா? காட்டில் நடக்கும் அமானுஷ்யம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    13 சிறுவர்களாக நடித்த அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். யாரும் அறிமுக நடிகர்களாக தெரியவில்லை. விஞ்ஞானி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் பார்த்திபன் தனக்கே உரிய பாணியில் நடித்துள்ளார்.

    இயக்கம்

    சிறுவர்களை மையமாக வைத்து ஒரு ஹாரர், திரில்லர் ஜானரில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பார்த்திபன். படத்தில் நடித்த சிறுவர்களின் பெயர்களை வைத்து ஒரு பாடலாக விவரித்து அவர்கள் குணாதிசியம் சொன்ன விதம் சூப்பர். முதல் பாதி மிகவும் எதிர்பார்ப்புடனும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் செல்கிறது. சிறுவர்களை வைத்து சொல்ல வந்த விஷயம் பாராட்டுக்குறியது.

    ஒளிப்பதிவு

    காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு ரசிக்க கூடியதாக அமைந்துள்ளது.

    இசை

    டி இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்.

    தயாரிப்பு

    பயோஸ்கோப் மற்றும் அகிரா தயாரிப்பு நிறுவனம் டீன்ஸ் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×