என் மலர்tooltip icon
    < Back
    தங்கலான்| Thangalaan: Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    தங்கலான்| Thangalaan: Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    தங்கலான்

    இயக்குனர்: Pa Ranjith
    எடிட்டர்:செல்வா ஆர்கே
    ஒளிப்பதிவாளர்:ஏ.கிஷோர் குமார்
    இசை:ஜி. வி. பிரகாஷ் குமார்
    வெளியீட்டு தேதி:15 Aug 2024
    Points:14322

    ட்ரெண்ட்

    வாரம்123456
    தரவரிசை361927416158
    Point2891776629506128320
    கரு

    அடிமைத்தனத்தில் இருந்து மீள தங்கத்தை தேடும் தங்கலானின் கதை

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    வேப்பூரில் கிராம மக்கள் ஜமீந்தார்களுக்கு அடிமையாக வாழ்ந்து அவர்கள் சொல்லும் வேலைகளை செய்து வருகின்றனர். ஆனால் சீயான் விக்ரம் மட்டும் அவரது சொந்த நிலத்தில் பயிற் வளர்த்து வருகிறார். இதுப்பிடிக்காத ஜமீந்தார் விக்ரமின் பயிற் நிலத்தை தீ வைத்து விடுகிறார். இதனால் ஆங்கிலேயர்களுக்கு அம்மக்கள் கட்ட வேண்டிய வரியை தான் கட்டிவிடுவதாகவும் பதிலுக்கு ஜமீனுக்கு அடிமையாக வேலை செய்ய சொல்கிறார்.

    ஜமீன்தார்களின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற ஆங்கிலேயர்களுக்கு தங்கத்தை கண்டுபிடிக்க முடிவு செய்கிறான் தங்கலான். இதனால் இவர்களின் மக்களை அழைத்துச் தங்கம் இருக்கும் இடத்திற்கு செல்கிறான். அந்த தங்கம் இருக்கும் இடத்தை பல காலங்களாக ஒரு அமானுஷ்ய சக்தி பாதுகாத்து வருகிறது. இந்த அமானுஷ்ய சக்தியின் பின்னணி என்ன? சூனியகாரிக்கும் விக்ரமிற்கும் என்ன தொடர்பு ? தங்கத்தை கண்டுப்பிடித்தார்களா இல்லையா? ஆங்கிலேயர்களிடம் இருந்து இவர்கள் எவ்வாறு மீண்டனர் என்பதே படத்தின் கதை.

    நடிகர்கள்

    சீயான் விக்ரம் நடிப்பை வார்த்தையால் சொல்ல முடியாது. இப்படத்திற்கு அவர் போட்டிற்கும் உழைப்பு அபாரம். இப்படத்தை அவரின் நடிப்பால் தோளில் சுமந்துள்ளார். பார்வதி நடிப்பில் மிரட்டியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களுக்கு இடையே இருக்கும் காதல் காட்சிகள் ரசிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. ஆரத்தி கதாப்பாத்திரத்தில் மாளவிகா மோகனன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    பசுபதி வழக்கம்போல் அவரது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சீயானின் குடும்பமாக நடித்து இருக்கும் ப்ரீத்தி கரன், ஹரி கிருஷ்ணன், அர்ஜூன் அவர்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

    இயக்கம்

    பா. ரஞ்சித் அடிமைத்தனத்தையும், நிலத்தின் அரசியலை வித்தியாசமான கதைக்களத்திலும் வித்தியாசமான பாணியிலும் சொல்ல முயற்சி செய்துள்ளார். இரண்டாம் பாதியில் கதை ஒரே இடத்தை மையப் படுத்தி இருப்பதால் திரைக்கதையில் தொய்வு ஏற்படுகிறது. படத்தின் லைவ் சவுண்ட் ஒரு பக்கம் பலமாக இருந்தாலும் அதுவே சில இடங்களில் வசனங்கள் புரியாமல் போகிறது. மேஜிக்கல் ரியலிசம் என்ற கதைக்களத்தில் பயணிக்கும் இப்படம் ஜெனெரல் ஆடியன்சிற்கு புரியாமல் போகிறது. க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரே நிகழ்ச்சி பகல் மற்றும் இரவாக மாறி மாறி வருவது சிறப்பான அனுபமவமாக இருந்தது.

    இசை

    ஜி.வி பிரகாஷின் இசை படத்திற்கு பெரிய பலம். காட்சிக்கு காட்சி மாறுப்பட்ட இசையை கொடுத்து திரையோட்டத்திற்கு பெரிய பலத்தை அளித்துள்ளார்.

    ஒளிப்பதிவு

    கிஷோர் குமார் சிறப்பான ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். தங்கலான் உலகத்திற்கே நம்மளை அழைத்து செல்கிறார்.

    தயாரிப்பு

    ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தங்கலான் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    21 Aug 2024
    Deva

    Amezing flim

    ×