என் மலர்


தி நன் 2
நன்னை தேடிச் செல்லும் கதாநாயகி குறித்த கதை
கதைக்களம்
வேலைக்காரனின் உடம்பில் நன் புகுந்துவிடுவதுடன் ‘தி நன்’ படத்தின் முதல் பாகம் முடிகிறது. இதன் இரண்டாம் பாகத்தில் வேலைக்காரன் உடம்பின் மூலமாக நன் வெளியுலகத்திற்கு வருகிறது. இந்த வேலைக்காரன் ஒரு கிறிஸ்துவ பள்ளியில் பணிபுரிகிறான்.
இந்த பள்ளியில் வந்து சேருவதற்காக பல தேவாலயங்களுக்கு சென்று பலரை கொன்றுவிட்டு கடைசியாக இந்த பள்ளியில் வந்து சேர்கிறான். இந்த கொலைகளை தெரிந்துக் கொண்ட தேவாலய ஊழியர்கள் கதாநாயகியை இந்த கொலைகள் எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரிப்பதற்காக அனுப்பி வைக்க முடிவு செய்கின்றனர்.
ஆனால் கதாநாயகி செல்ல மறுக்கிறார். தேவாலய ஊழியர்கள் அவரை கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர். வேறு வழியில்லாமல் கதாநாயகியும் அந்த கொலைகள் குறித்து விசாரிக்க செல்கிறார்.
இறுதியில் வேலைக்காரன் எதற்காக கொலைகளை செய்தான்? வேலைக்காரன் உடம்பில் நன் இருப்பதை கதாநாயகி கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகி டைசா பார்மிகா சிறப்பாக நடித்துள்ளார். பயம், அழுமை, பதற்றம் என அனைத்தையும் தன் முகத்தில் காண்பித்து ரசிகர்களையும் மிரள வைத்துள்ளார்.
இயக்குனர்
இயக்குனர் மைக்கேல் சாவ்ஸ் விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளார். அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றத்துடன் படம் முழுக்க பயணிக்க வைக்கிறார்.
இசை
மார்க்கோ பெத்ராமி இசையின் மூலம் மிரட்டியுள்ளார்.
ஒளிப்பதிவு
திரிஸ்டன் நிபி தன் ஒளிப்பதிவின் மூலம் பேய்களை கண்முன் நிறுத்தியுள்ளார். இவர் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
படத்தொகுப்பு
கிரிகோரி ப்ளாட்கின் படத்தொகுப்பு அருமை.