என் மலர்tooltip icon
    < Back
    The Road
    The Road

    தி ரோட்

    இயக்குனர்: அருண் வசீகரன்
    எடிட்டர்:ஏ.ஆர்.சிவராஜ்
    ஒளிப்பதிவாளர்:கே.ஜி.வெங்கடேஷ்
    இசை:சாம் சி.எஸ்
    வெளியீட்டு தேதி:6 Oct 2023
    Points:1881

    ட்ரெண்ட்

    வாரம்123
    தரவரிசை13912398
    Point588971322
    கரு

    நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்து, திருட்டு, மர்மம் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நாயகி திரிஷா தனது கணவர் சந்தோஷ் பிரதாப் மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மகனின் பிறந்தநாள் பார்ட்டிக்காக காரில் கன்னியாகுமரி செல்ல திட்டமிடுகிறார்கள். ஆனால் திரிஷா இரண்டாவது முறை கர்ப்பமானதால், கணவர் மற்றும் மகன் இருவர் மட்டும் காரில் டிரிப் செல்கிறார்கள்.செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு கணவர் மற்றும் மகன் இருவரும் இறந்து போகிறார்கள். கணவர் இறந்த இடத்திற்கு செல்லும் திரிஷா, அந்த நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதையும் சில விபத்துகள் மர்மமாக இருப்பதையும் அறிகிறார். மேலும் தன் கணவர் விபத்தில் சந்தேகம் இருப்பதையும் உணர்கிறார்.இறுதியில் தன் கணவரின் விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை திரிஷா கண்டுபிடித்தாரா? நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட காரணம் என்ன? விபத்தின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் திரிஷா, முழு கதையையும் தன் தோளில் தாங்கி இருக்கிறார். கணவருடன் பாசம், இறந்த பிறகு வருத்தம், மர்மத்தை கண்டு பிடிக்கும் ஆர்வம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். கணவர் இறந்த செய்தி கேள்விப்பட்டு நீண்ட தூரம் ஓடிச் சென்று அழும் காட்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.ஆசிரியராக வரும் சபீரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். சின்ன சின்ன அசைவுகளில் கூட கவனிக்க வைத்து இருக்கிறார். சிறிது நேரம் மட்டுமே வந்து சென்றிருக்கிறார் சந்தோஷ் பிரதாப். தோழியாக வந்து கவர்ந்து இருக்கிறார் மியா ஜார்ஜ்.

    இயக்கம்

    நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்து, திருட்டு, மர்மம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன். இரண்டாம் பாதி திரைக்கதை நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். அதுபோல் ஷபீரின் கதையை சுருக்கி இருக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு கதைகளை மாற்றி மாற்றி காண்பித்து, கடைசியில் சிறிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

    இசை

    சாம் சி.எஸ். இசையின் சத்தம் அதிகமாகவே இருந்தது. ஒரு சில இடங்களில் தேவைக்கு மீறியது போல் இருந்தது.

    ஒளிப்பதிவு

    வெங்கடேஷின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    படத்தொகுப்பு

    ஏ.ஆர்.ஷிவராஜ் படத்தொகுப்பு ரசிக்கலாம்.

    காஸ்டியூம்

    சைதன்யா ராவ் காஸ்டியூம் டிசைன் ஓகே.

    புரொடக்‌ஷன்

    ஏஏஏ சினிமா பிரைவெட் லிமிடெட் நிறுவனம் ‘தி ரோட்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    23 Nov 2023
    Baby Gillba

    Okay

    ×