என் மலர்


தீ இவன்
காதல், பாசம், சாதியை மையமாக வைத்து உருவாகியுள்ள கதை.
கதைக்களம்
நடிகர் கார்த்தியின் தங்கை கீழ் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை காதலித்து கர்ப்பமாகிறாள். இந்த விஷயம் தந்தை ராதா ரவிக்கு தெரிய வரவே அவர் மகளை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கிறார். மகளுக்கு இப்படி ஒரு தீப்பு கொடுத்துவிட்டோமே என்ற வேதனையில் ராதாரவி இறந்துவிடுகிறார். கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் இறந்துவிடுகிறார்.
தந்தையின் வாக்கை வேத வாக்காக மதிக்கும் கார்த்திக் தன் தங்கையிடம் பேசமால் இருக்கிறார். இப்படி இருக்க கார்த்திக்கின் மகளும் அவரின் தங்கை மகனும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இந்த நேரத்தில் ஜான் விஜய் தன் மகனுக்கு கார்த்திக்கின் மகளை திருமணம் செய்ய கேட்கிறார். இதை கார்த்திக் மறுத்துவிடவே ஜான் விஜய்யின் மகன் கார்த்திக்கை பழிவாங்க துடிக்கிறார்.
இறுதியில், ஜான் விஜய் மகனாள் என்ன பிரச்சனை நடந்தது? கார்த்திக் மகளும் தங்கை மகனும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நடிகர் கார்த்திக் தந்தை என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார். ராதா ரவி, சுகன்யா, ஜான் விஜய் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
இயக்கம்
காதல், பாசம், சாதியை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜெயமுருகன். படத்தின் திரைக்கதையை இன்னும் வலுவாக அமைத்திருக்கலாம். அனுபவமுள்ள நடிகர்களை படத்தில் பயன்படுத்திய இயக்குனர் அவர்களிடம் வேலை வாங்க தவறிவிட்டார்.
இசை
இயக்குனர் ஜெயமுருகன் இசையில் பாடல்கள் ஓகே.
ஒளிப்பதிவு
ஒய்.என்.முரளி ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
புரொடக்ஷன்
மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் ‘தீ இவன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.