என் மலர்


திருவின் குரல்
அரசு மருத்துவமனையில் நடைபெறும் அவலங்களை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார் என்பது குறித்த கதை.
கதைக்களம்
நாயகன் அருள்நிதிக்கு வாய் பேச முடியாது மற்றும் காது சிறிதளவு கேட்கும். இவர் தந்தை பாரதிராஜா உடன் இணைந்து கட்டிட வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் கட்டிட வேலையின் போது பாரதிராஜாவுக்கு விபத்து ஏற்படுகிறது. இவரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கிறார் அருள்நிதி.
மருத்துவமனையில் பணிபுரியும் நான்கு நபர்களுக்கும் அருள்நிதிக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் அந்த நான்கு நபர்கள் செய்யும் குற்றங்களுக்கும் அருள்நிதி தடையாக நிற்கிறார். இதனால் கோபமடையும் நான்கு பேரும், அருள் நிதியை பழிவாங்க நினைக்கிறார்கள்.
இறுதியில் தந்தை பாரதிராஜாவை அரசு மருத்துவமனையில் இருந்து அருள் நிதி காப்பாற்றினாரா? நான்கு நபர்களின் தொந்தரவை எப்படி அருள்நிதி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருள்நிதி திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வசனம் ஏதும் இல்லாமல் முக அசைவுகள் உடல் மொழியால் நடித்து பாராட்டை பெற்று இருக்கிறார். குறிப்பாக காதல் மற்றும் சென்டிமென்ட் காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். கிளைமாக்சில் நெகிழ வைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆத்மிகா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பெரியதாக வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார் பாரதிராஜா. வில்லன்களாக நடித்திருக்கும் நான்கு நபர்களும் எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
இயக்குனர்
எளிய கதையை வித்தியாசமான திரைக்கதை மூலம் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரிஷ் பிரபு. மருத்துவமனையில் நடக்கும் அவலங்களை துணிச்சலோடு சொல்லி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.
இசை
சாம் சி.எஸ். இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கொஞ்சம் இரைச்சலை தவிர்த்து இருக்கலாம்.
ஒளிப்பதிவு
சின்டோவின் ஒளிப்பதிவு சிறப்பு.
படத்தொகுப்பு
கணேஷ் சிவா படத்தொகுப்பு அருமை.
சவுண்ட் எபெக்ட்
உதயகுமார் சவுண்ட் மிக்ஸிங்கில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
புரொடக்ஷன்
லைகா நிறுவனம் ‘திருவின் குரல்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.