என் மலர்


தோழர் சேகுவேரா
அடக்குமுறையை எதிர்த்து போராடும் இளைஞனின் கதை
கதைக்களம்
சாதிய கட்டமைப்புக்குள் இருக்கும் ஒரு ஊரில், மேச் சாதி மக்கள் மட்டுமே படிக்கக்கூடிய சூழல் நிலவும் இருக்கிறது. அந்த ஊரில் நாயகன் அலெக்ஸ் கஷ்டப்பட்டு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுகிறார்.
இதற்கிடையே, நலிந்த சமூகத்தினர் வாழும் பகுதியின் அருகில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் சத்யராஜ், அங்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருவதோடு, நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களை பொறியியல் கல்லூரியில் சேர்க்க முயற்சிக்கிறார். அதன்படி, நாயகன் அலெக்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று இட ஒதுக்கீடு மூலம் பொறியியல் கல்லூரியில் இடம் பெறுகிறார். கல்லூரியில் சேர்ந்ததும், இனி நம் கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிட்டது என்று நினைக்கும் அலெக்ஸ், கல்லூரியின் முதல் நாளில் இருந்தே சாதிய வன்முறைக்கு ஆளாகிறார். அந்த கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் அரசியல்பின்புலம் நிறந்த மகனுக்கும் அலெக்ஸுக்கு அடிக்கடி பிரச்சனைகளும் , சண்டைகளும் நடந்த வண்ணம் உள்ளன.
இதனால் ஒருக்கட்டத்திற்கு மேல் பொறுத்து போக முடியாமல், சாதிய அடக்குமுறையை எதிர்த்து அங்குள்ள பேராசியர்களையும், அரசியல்வாதி மகனை எதிர்த்து சண்டை போடுகிறான். இதற்கு அடுத்து என்ன ஆனது? இந்த யுத்தத்தில் அலெக்ஸ் வென்றானா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஏ.டி.அலெக்ஸ், கதாபாத்திரத்திற்கு ஏற்ற விவேகத்துடனும், வேகத்துடனும் நடித்திருக்கிறார். சாதிய வன்முறையால் பாதிக்கப்படும் போது அமைதி காப்பவர், ஒரு கட்டத்தில் எழுச்சி பெறும் காட்சி திரையரங்கையே அதிர வைக்கிறது.
சேகுவேரா கதாபாத்திரத்தில் கல்லூரி பேராசியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், வரும் காட்சிகள் குறைவு என்றாலும், சேகுவரா என்ற பெயருக்கு பெறுமை சேர்க்கும் விதமாக நடித்திருக்கிறார். அவரது அனுபவம் வாய்ந்த நடிப்பும், வசனங்களும் படத்தை தாங்கிப்பிடித்திருக்கிறது.
கலியபெருமாள் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த நடிகர் கவனம் ஈர்க்கிறார். நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அளவாக பயணித்திருக்கிறார்கள்.
இயக்கம்
சாதிய அடக்குமுறையை எதிர்க்கும் இளைஞனின் கதையை மிக நேர்த்தியாக ஆக்ஷன் காட்சிகள் நிறைத்து இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனரான அலெக்ஸ். முதல் பாதி சற்று தோய்வாக இருந்தாலும். இரண்டாம் பாதியின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் திரைக்கதையின் ஓட்டம் நம்மை இழுத்து செல்கிறது. படத்தின் திரைக்கதை அமைப்பில் சிறிது கவனம் செலுத்திருக்கலாம். முதல் படத்தில் நடித்தும், இயக்கியும் அடக்குமுறைக்கு வழி நாம் எதிர்த்து போராடுவதுதான் என்ற கருத்தை கூறியதற்கு பாராட்டுகள்.
ஒளிப்பதிவு
சாம் அலனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்
இசை
இசையமைப்பாளர் பி.எஸ் அஸ்வின் இசை கேட்கும் ரகம்
தயாரிப்பு
கிரே மாஜிக் கிரியேஷன் இப்படத்தை தயாரித்துள்ளது.