என் மலர்tooltip icon
    < Back
    Tiger-3
    Tiger-3

    டைகர்-3

    இயக்குனர்: மனீஷ் சர்மா
    எடிட்டர்:ராமேஷ்வர் எஸ். பகத்
    ஒளிப்பதிவாளர்:அனய் கோஸ்வாமி
    இசை:ப்ரீதம் சக்ரவர்த்தி
    வெளியீட்டு தேதி:12 Nov 2023
    Points:1652

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை97131
    Point911741
    கரு

    சீக்ரெட் ஏஜெண்ட் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    இந்தியாவின் சீக்ரெட் ஏஜெண்டான சல்மான்கான் பாகிஸ்தான் சீக்ரெட் ஏஜெண்ட் கத்ரீனா கைஃபை காதலித்து திருமணம் செய்கிறார். திருமணத்திற்கு பின் சல்மான்கான் மட்டுமே சீக்ரெட் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். ஒருநாள் ஆபத்தில் இருக்கும் ஒரு நபரை சல்மான்கான் மீட்கிறார்.

    அந்த நபர் கத்ரீனா ஸ்பையாக செயல்படுவதாக கூறுகிறார். இதனால் மனமுடைந்த சல்மான்கான் தன் மனைவியான கத்ரீனாவை பின் தொடர்கிறார். இறுதியில் கத்ரீனா யார் என்பதை சல்மான்கான் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    சல்மான்கான் சீக்ரெட் ஏஜெண்ட் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். ரொமான்ஸ், ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்து பாராட்டை பெறுகிறார். கத்ரீனா கைஃப் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து திரையை ஆக்கிரமித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் இப்படியும் செய்ய முடியுமா என பிரமிக்க வைத்துள்ளார். நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் சிறப்பு தோற்றத்தில் நடித்து கவர்ந்திருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் கதைக்கு தேவையான நடிக்கை கொடுத்துள்ளனர்.

    இயக்கம்

    டைகர் ஜிந்தா ஹேய், பதான், வார் ஆகிய படங்களின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மணீஷ் ஷர்மா. இந்தப் படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸில் வெளியாகும் ஐந்தாவது படமாகும். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர். கதாபாத்திரங்களுக்கிடையே சிறப்பாக வேலை வாங்கியுள்ளார்.

    இசை

    பிரீத்தம் சக்ரவர்த்தி இசை படத்திற்கு பலம்.

    ஒளிப்பதிவு

    வைபவ் ஒளிப்பதிவு சிறப்பு.

    புரொடக்‌ஷன்

    யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் ‘டைகர் 3’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    வாசகர் விமர்சனம்
    19 Feb 2024
    Shiva

    ×