என் மலர்


ட்ராமா
செயற்கை கருத்தரிப்பு மைய மோசடியின் பின்னணியை மையப்படுத்திய கதை
கதைக்களம்
விவேக் பிரசன்னா - சாந்தினி தமிழரசன் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் மனக்கவலையில் இருக்கின்றனர். குழந்தை பெற இயலாத தன்மையில் இருக்கிறார் கதாநாயகனாக விவேக் பிரசன்னா. ஆனால் இதனை மனைவியிடம் மறைத்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு நாள் செயற்கை கருத்தரிப்பு மையத்தின் விளம்பரத்தை பார்க்கிறார். இதனை பிரதீப் கே விஜயன் நடத்தி வருகிறார். அதில் 100 சதவீதம் கண்டிப்பாக குழந்தை கருத்தரிக்கபடும் என இருப்பதால் அவர்கள் தரும் மருந்துகளை தன் மனைவிக்கு தெரியாமல் உணவில் கலந்து கொடுத்து வருகிறார். ஒருக்கட்டத்தில் சாந்தினி கர்ப்பம் ஆகிறாள்.
மறுப்புறம் ஆட்டொ டிரைவரான மாரிமுத்து- ரமா தம்பதியின் மகளான பூர்ணிமா ரவி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இவரை பார்த்தோஷ் காதலிக்கிறார். மற்றொருபுறம் கார் மெக்கானிக்கான ஈஸ்வர், அவருடைய நண்பர்கள் மூலம் கார் திருடி விற்று வருகிறார்.
இந்த நான்கு கதாப்பாத்திரங்களும் ஒரு பிரச்சனையின் மூலம் இணைகின்றனர். அது என்ன பிரச்ச்னை? சாந்தினி கருவுற்றதற்கும் இந்த கதாப்பாத்திரங்களுக்கு என்ன தொடர்பு? இதுவே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
கதாநாயகனாக நடித்து இருக்கும் விவேக் பிரசன்னா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். அவரது மனைவியாக நடித்த சாந்தினி தமிழரசன் தாய்மை அடைய வேண்டும் என்ற பெண்களின் மனதை பிரதிபலித்துள்ளார்.
பூர்ணிமா ரவி மற்றும் பார்த்தோஷ் நடிப்பு நவீன காதலர்களை பிரதிபலிக்கும் படி அழகாக நடித்துள்ளனர். ஆனந்த் நாக் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆட்டோ ஓட்டுனராக நடித்துள்ள மாரிமுத்து மற்றும் ரமா நடுத்தர குடும்பத்தின் நிலையை கண்முன் கொண்டு வருகின்றனர். மற்ற நடிகர்களான சஞ்சீவ், வையாபுரி,நிழல்கள் ரவி அவர்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இயக்கம்
மருத்துவத்துறை பின்னணியில் ஹைபர் லிங்க் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன். கடந்த சில ஆண்டுகளாக குழந்தையின்மை-க்கு சிகிச்சை அளிப்பதாக பல மோசடிகள் நடைப்பெற்று வருகிறது அதனை மையப்படுத்தி கதையை இயக்கியுள்ளார். முதல் பாதியின் காட்சியமைப்பு மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். கதை எதிநோக்கி போகிறது என்றே தெரியவில்லை அதனை இரண்டாம் பாதியில் ஈடுக்கட்ட முய்ற்சித்துள்ளார்.
ஒளிப்பதிவு
அஜித் ஸ்ரீனிவாசனினி ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இசை
ஆர்.எஸ் ராஜ பிரதாபின் இசை கேட்கும் ரகம்
தயாரிப்பு
Turm Production House நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.