என் மலர்


உலகம்மை
ஊர் மக்கள் ஏற்படுத்தும் நெருக்கடியை சமாளிக்கும் பெண் குறித்த கதை.
கதைக்களம்
கவுரி ஜி கிஷனின் தோழிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அப்போது மாப்பிள்ளைக்கு கவுரியை பிடித்து விடவே அவளை தான் கட்டுவேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இதனால் ஆதரவாக இருந்த தோழியின் தந்தை மாரி முத்து அவரை வெறுத்துவிடுகிறார். அதுமட்டுமல்லாமல் ஊர் மக்களும் கவுரிக்கு நெருக்கடியை கொடுக்கின்றனர்.
இறுதியில் கவுரி எப்படி இந்த பிரச்சினைகளை எல்லாம் சமாளிக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள கவுரி ஜி கிஷன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்துள்ளார். நெருக்கடியில் இருக்கும் போதும், தன் தந்தை பிணத்தை கொண்டு அலையும் காட்சிகளில் கண்கலங்க வைத்துள்ளார். மறைந்த நடிகர் மாரிமுத்து தன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பெரும்பாலும் புதுமுக நடிகர்கள் என்பதால் நடிப்பு பெரிதாக கவரவில்லை.
இயக்குனர்
அந்த காலத்து தீண்டாமை கதையை மையமாக வைத்து கதையை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜெயபிரகாஷ் வீரப்பன். முக்கிய கதாபாத்திரங்களை படத்தில் நடிக்க வைத்துவிட்டு திரைக்கதையை கோட்ட விட்டுவிட்டார். திரைக்கதையை இன்னும் பலமாக அமைத்திருக்கலாம்.
இசை
இளையராஜா இசை படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவு
கே.வி. மணி ஒளிப்பதிவில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
படத்தொகுப்பு
சுரேஷ் படத்தொகுப்பு ஈர்க்கவில்லை.
காஷ்டியூம்
ஜெயபாலன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூம் டிசைன் செய்துள்ளார்.
புரொடக்ஷன்
மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி நிறுவனம் ‘உலகம்மை’ படத்தை தயாரித்துள்ளது.