search icon
என் மலர்tooltip icon
    < Back
    வாழை : Vaazhai Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamila Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    வாழை : Vaazhai Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamila Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    வாழை

    இயக்குனர்: மாரி செல்வராஜ்
    எடிட்டர்:சூரிய பிரதமன்
    ஒளிப்பதிவாளர்:தேனீ ஈஸ்வர்
    இசை:சந்தோஷ் நாராயணன்
    வெளியீட்டு தேதி:2024-08-23
    Points:14128

    ட்ரெண்ட்

    வாரம்12345678
    தரவரிசை6519161611161615
    Point12416531369913519642228634
    கரு

    இயக்குனர் மாரி செல்வராஜ், தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் காட்சிகளாக அமைத்து வாழை படத்தை உருவாக்கி உள்ளார்.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    இயக்குனர் மாரி செல்வராஜ், தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் காட்சிகளாக அமைத்து வாழை படத்தை உருவாக்கி உள்ளார்.

    சிறுவயதிலேயே அப்பாவை இழந்த சிறுவன் பொன்வேல்,  அம்மா மற்றும் அக்காவுடன் வாழ்ந்து வருகிறான்.  அம்மாவும், அக்காவும் பக்கத்தில் உள்ள ஊர்களில் வாழைத்தார்களை அறுத்து அதை லாரியில் ஏற்றும் பணியை செய்து வருகிறார்கள். எட்டாம் வகுப்பு படித்து வரும் பொன்வேல் பள்ளி விடுமுறை நாட்களில் வாழைத்தார் தூக்கும் பணிக்கு செல்கிறான்.

    இந்த பணிக்கு சென்றாலும், அதில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறான். ஒருநாள், வாழைத்தார் அறுக்கும் பணிக்கு செல்லும் போது, தன் அக்காவிடம் பள்ளி நடன ஒத்திகைக்கு செல்வதாக சொல்லி விட்டு, அம்மாவை ஏமாற்றி விட்டு செல்கிறான். அந்த நாளில் நடக்கும் துயரமான சம்பவம் தான் வாழை படத்தின் கதை.

    நடிகர்கள் 

    சிறுவன் பொன்வேல் சுற்றியே முழு கதையும் நகர்கிறது. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பூங்கொடி டீச்சர் மீது பாசம் காட்டுவது, வாழைத்தார் தூக்கும் பணிக்கு விருப்பம் இல்லாமல் செல்வது, தனது நண்பனுடன் சின்ன சின்ன குறும்புகள் செய்வது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார்.

    பொன்வேல் நண்பனாக நடித்திருக்கும் ராகுல், போட்டி போட்டு நடித்து இருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, குடும்ப கஷ்டம் தாங்கி நடித்து இருக்கிறார். பொன்வேல் சாப்பிடாமல் வீட்டை விட்டு ஓடும் காட்சியில் ஜானகி கவனிக்க வைத்து இருக்கிறார். அக்காவாக நடித்திருக்கும் திவ்யா துரைசாமி அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். நியாத்து போராடும் இளைஞராக மனதில் பதிகிறார் கலையரசன். டீச்சராக நடித்திருக்கும் நிகிலா விமல் படத்திற்கு அழகு சேர்த்து இருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திருநெல்வேலி வட்டார தமிழ் பேசி எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

    இயக்கம் 

    கூலிவேலை செய்யும் விவசாய மக்களுக்கு நேர்ந்த வலிமிகுந்த சம்பவத்தை நம்மில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.  சிறுவர்களிடையே நடக்கும் கமல் ரஜினி சண்டை, டீச்சர் மீது அன்பு, முதலாளித்துவம், உழைப்பாளர்கள் வலி என அனைத்தையும் உள்ளடக்கி திரைக்கதை அமைத்து இருக்கிறார் மாரி செல்வராஜ். திரைக்கதையின் நீளத்தை இன்னும் குறைத்து இருக்கலாம். குறைகள் இருந்தாலும் அவை பெரியதாக தெரியவில்லை.

    இசை 

    சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இவரது பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்றார் போல் பயணித்து இருக்கிறது. கதைக்களத்தை சார்ந்து பயணித்திருக்கிறது.

    ஒளிப்பதிவு 

    தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் அப்படியே படம்பிடித்து இருக்கிறார்.

    தயாரிப்பு 

    Disney+ Hotstar, Navvi Studios, Farmer’s Master Plan Production  ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×