என் மலர்tooltip icon
    < Back
    வீராயி மக்கள் | Veerayi Makkal: Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil
    வீராயி மக்கள் | Veerayi Makkal: Trailer, Review, Cast & Crew, OTT Release Details in Tamil

    வீராயி மக்கள்

    இயக்குனர்: நாகராஜ் கருப்பையா
    எடிட்டர்:முகன்வேல்
    இசை:தீபன் சக்கரவர்த்தி
    வெளியீட்டு தேதி:9 Aug 2024
    Points:332

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை263266
    Point167165
    கரு

    அண்ணன், தம்பி, சகோதரி உறவுகளுக்கிடையே நடைபெறும் உறவும், பிரிவும் பற்றிய கதை.

    விமர்சனம்

    கதைக்களம்

    அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாய் பாண்டி அக்கா அரவணைப்பில் வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, ஜெரால்டு மில்டன், அண்ணன் தம்பிகளாகவும், சகோதரி தீபாவுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    தீபாவுக்கு திருமணமாகி வேறொரு ஊருக்கு செல்கிறார். கூட்டுக் குடும்பமாக வேல ராமமூர்த்தி, மாரிமுத்து குடும்பம் வாழ்ந்து வருகிறது. திடீரென அண்ணன், தம்பி உறவுகளுக்கிடையே பகை ஏற்பட்டு பல வருடமாக எந்த தொடர்பும் இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.

    ஒன்றாக இருந்த உறவுகள் பிரிந்ததன் பின்னணி என்ன? மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிப்பு

    குடும்பத்தில் மூத்தவராக வேல ராமமூர்த்தி, தம்பியாக மாரிமுத்து ஆகியோர் நடைமுறையில் பெரும்பாலான குடும்பங்களில் வரும் உறவுகளையும், பிரிவுகளையும் பிரதிபலித்துள்ளனர். இருவரும் போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    நீண்ட வருடங்களாக பிரிந்த அப்பாவையும், சித்தப்பாவையும் மீண்டும் ஒன்று சேர்க்க முயற்சிக்கும் காட்சிகளில் சுரேஷ் நந்தாவின் நடிப்பு யதார்த்தம்.

    அண்ணன் பாசத்துக்கு ஏங்கி கதறி அழும் தீபா சங்கர் தனது நடிப்பில் சமூகத்தில் பல சகோதரிகளை கண்முன் நிறுத்தி உள்ளார். வேல ராமமூர்த்தி மனைவியாகவும், மூத்த மருமகளாகவும் நடித்துள்ள ரமாவின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. மாரிமுத்து மனைவியாக வரும் செந்தில்குமாரி குடும்பத்து பார்வையாளர்கள் வெறுக்கும் வில்லியான மருமகள். மகன்கள் சண்டையிட்டு பிரிவதும் மருமகளுக்கிடையே சிக்கி கொண்டு தவித்து கடைசியில் உயிரை விடும் பாண்டி அக்கா காட்சிகளில் பரிதாபத்தை வரவழைக்கிறார்.

    இயக்கம் 

    அண்ணன், தம்பி, சகோதரி உறவுகளுக்கிடையே நடைபெறும் உறவும், பிரிவையும் மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா. கூட்டுக்குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பத்தை வாரிசுகள் ஒன்று சேர்ப்பது போன்று திரைக்கதை அமைத்து கவர்ந்து இருக்கிறார். முதல் பாதி திரைக்கதை மெதுவாக செல்வது பலவீனம்.

    இசை & ஒளிப்பதிவு 

    கதைக்கேற்ற தீபன் சக்கரவர்த்தி இசை, சீனிவாசனின் ஒளிப்பதிவு படத்துக்கு கூடுதல் பலம்.

    தயாரிப்பு

    எ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×