என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வேட்டையன்
- 0
- 7
- 1
வாரம் | 1 | 2 | 3 | 4 | 5 |
---|---|---|---|---|---|
தரவரிசை | 3 | 3 | 5 | 9 | 52 |
Point | 11084 | 15920 | 7371 | 2892 | 66 |
என்கவுண்டருக்கும் மனித உரிமைக்கான போராட்டத்தை பற்றி பேசும் கதை.
கதைக்களம்
என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட்டாக இருக்கும் ரஜினிகாந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி மஞ்சு வாரியருடன் வாழ்ந்து வருகிறார். தீர விசாரித்து துணிச்சலுடன் ரவுடிகளை என்கவுண்டர் செய்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் துஷாரா விஜயன், பள்ளியில் ரவுடிகள் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக ரஜினிக்கு தகவல் கொடுக்கிறார்.
இதை அறிந்த ரஜினி ரவுடிகளை என்கவுண்டர் செய்கிறார். தைரியமாக ரவுடிகளை பற்றி துஷாரா விஜயனுக்கு பாராட்டு கிடைக்கிறது. மேலும் சென்னையில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு பணிக்கு செல்கிறார்.
சில நாட்களில் துஷாரா விஜயன் மர்ம நபரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். போலீஸ் விசாரணையில் அசல் கோளாறு செய்ததாக கூறுகிறார்கள். இதையறிந்த ரஜினி சென்னைக்கு வந்து அசல் கோளாறை என்கவுண்டர் செய்கிறார். ஆனால், அது போலி என்கவுண்டர் என்று தெரிய வருகிறது.
இறுதியில் துஷாரா விஜயனை உண்மையில் கொலை செய்தது யார்? எதற்காக செய்தார்கள்? உண்மையான குற்றவாளியை ரஜினி கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரஜினி, மாஸான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நடனம் ஆடி கவர்ந்து இருக்கிறார். குற்றவாளியை பிடிக்க தீவிரம் காட்டுவதில் மாஸ் செய்து இருக்கிறார்.
ரஜினி மனைவியாக நடித்து இருக்கும் மஞ்சு வாரியர் அழகால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குறிப்பாக நடனத்தில் கட்டி இழுத்து இருக்கிறார். பள்ளி ஆசிரியராக நடித்து இருக்கும் துஷாரா, பார்ப்பவர்களை பரிதாப பட வைத்து இருக்கிறார். கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்து இருக்கிறார் பகத் பாசில். குறிப்பாக காமெடியில் ரசிக்க வைத்து இருக்கிறார்.
ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அமிதாப்பச்சன். போலீஸ் உடையில் மிடுக்காக நடித்து அசத்தி இருக்கிறார் ரித்திகா சிங். வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார் ராணா. அபிராமி, அசல் கோளாறு உள்ளிட்ட பலரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
கல்வியில் நடக்கும் மோசடியை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் டி.ஜே.ஞானவேல். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யத்துடனும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்தி இருக்கிறார். என்கவுண்டர் சரியா? தவறா? என்ற விஷ்த்தை ஆழமாக பதிவு செய்து இருக்கிறார். கல்வி வியாபாரமாக்கப்படுவதை மிகவும் துணிச்சலுடன் கூறியதற்கு பாராட்டுகள். பலருக்கும் தெரியாத விஷயத்தை தெளிவாக காட்டி இருக்கிறார். பணக்காரர்களுக்கு கல்வி வியாபாரமாக மாறக்கூடாது என்று ஆணித்தனமாக சொல்லி இருக்கிறார். பல காட்சிகள் மாஸாக அமைத்து ரசிகர்களுக்கு தீனி போட்டு இருக்கிறார்.
இசை
அனிருத்தின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசையில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு
கதிரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அருமை.
தயாரிப்பு
லைகா தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
Usual stuff
Nice
Super
I have not seen the film. !
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்