என் மலர்tooltip icon
    < Back
    Vil Vithai
    Vil Vithai

    வில் வித்தை

    இயக்குனர்: ஹரி உத்ரா
    எடிட்டர்:கிஷோர் எம்
    ஒளிப்பதிவாளர்:சிவகுமார் கணேஷ்
    இசை:அஜ் அலிமிர்சாக்
    வெளியீட்டு தேதி:7 July 2023
    Points:25

    ட்ரெண்ட்

    வாரம்12
    தரவரிசை457432
    Point1510
    கரு

    தன் மனைவி மற்றும் குழந்தையை காப்பாற்ற துடிக்கும் கணவன் குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    நகரில் தொடர் கொலைகள் நடக்கிறது. வழக்கின் தீவிரம் அறிந்து கொலையாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் களம் இறங்குகிறார்கள். மற்றொருபுறம் கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் அருண் மைக்கேல் மனைவிக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. அதனால் அவர் மனைவியை மருத்துவமனையில் சேர்க்கிறார்.

    தாயையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டுமானால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் அருண் மைக்கேல் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பணம் கேட்டு அலையும் போது ஒரு பிரச்சினையில் சிக்குகிறார்.

    இறுதியில் அவர் எப்படி இந்த பிரச்சினையை கையாண்டார்? பிரச்சினையில் இருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    கதாநாயகன் அருண் மைக்கேலுக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரம். அதை நன்றாக பயன்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். ஆரம்பத்தில் சாந்தமாக வந்து பாலியல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போது இன்னொரு முகம் காட்டுகிறார்.

    கதாநாயகி ஆராத்யா எளிமையான தோற்றத்தில் கவர்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் கெழுவை சுரேஷ்குமார் நேர்த்தியாக நடித்துள்ளார். அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி சோக காட்சிகளில் உருக வைக்கிறார். வில்லனாக குணா மிரட்டுகிறார்.

    இயக்கம்

    சமூக அக்கறை கொண்ட படமாக எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் ஹரி உத்ரா. திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு இருப்பது பலவீனம். பெண்கள் சமுதாயத்தில் வளர்ச்சி இருந்தாலும் பல இடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகுகிறார்கள் என்பதை அழுத்தமான திரைக்கதையில் சொல்ல முயற்சித்துள்ளார், ஆனால் அது பெரிய அளவில் வேலை செய்யவில்லை.

    இசை

    அலிமிர்ஸாக் பின்னணி இசை கூடுதல் பலம்.

    ஒளிப்பதிவு

    சிவகுமார் ஒளிப்பதிவு நள்ளிரவு காட்சிகளை அற்புதமாக படமாக்கி உள்ளது.

    படத்தொகுப்பு

    கிஷோர் எம் படத்தொகுப்பு சூப்பர்.

    சவுண்ட் எபெக்ட்

    சேகர் சவுண்ட் மிக்ஸிங் ஓகே.

    புரொடக்‌ஷன்

    உத்ரா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ‘வில் வித்தை' திரைப்படத்தை தயாரித்துள்ளது.

    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×